|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 January, 2012

பார்த்தால் பசி தீரும் படத்தின் 50வது ஆண்டு விழா

 மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பார்த்தால் பசி தீரும் படத்தின் பொன் விழா கொண்டாட்டம் சென்னையில் நடந்தது. 1962-ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, சவுகார் ஜானகி ஆகியோர் நடிப்பில், பீங் சிங் இயக்கத்தில் வெளிவந்த படம் "பார்த்தால் பசி தீரும்". இந்த படத்தின் 50வது ஆண்டு விழாவை   நடிகர் திலகம் பிலிம் சொசைட்டி மற்றும் பாரத் கலாசார் இணைந்து நடத்தியது. இந்த விழாவில் பழம்பெரும் நடிகைகள் சவுகார் ஜானகி, சச்சு, எம்.என்.ராஜம், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், ஜெமினி கணேசன் மகள் கமலா செல்வராஜ், வசன கர்த்தா ஆரூர் தாஸ், இசையமைப்பாளர் ராமமூர்த்தி, பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பார்த்தால் பசி தீரும் படத்தின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...