|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 January, 2012

பீகார் அமைச்சர்களை விட மனைவிமார்கள்தான் பணக்காரர்கள்!

பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே உள்ளிட்ட பல அமைச்சர்களை விட அவர்களின் மனைவிமார்கள் பணக்காரர்களாக உள்ளனர்.31-12-2011 அன்றுடன் முடிவடைந்த ஆண்டுக் கணக்கின்படி தங்களுக்கு உள்ள அசையும், அசையா சொத்துக்களின் விவரங்களை பீகார் மாநில் அமைச்சர்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங், கட்டுமானத் துறை அமைச்சர் தாமோதர் ரௌத், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நிதிஷ் மிஷ்ரா, நீர் வள அமைச்சர் விஜய் குமார் சவுதரி ஆகியோரைவிட அவர்களின் மனைவிகள் பணக்காரர்களாக உள்ளனர்.நரேந்திர சிங்கிடம் ரூ.25.50 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் உள்ளன. ஆனால் அவரது மனைவி சகர்மணி தேவியிடம் ரூ.27.42 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் உள்ளன.

இதே போன்று சுகாதாரத் துறை அமைச்சர் சௌபேயிடம் ரூ.61.24 லட்சம் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன. ஆனால் அவரது மனைவி நீதாவிடம் ரூ.94.99 லட்சம் சொத்துக்கள் உள்ளன. அதாவது அமைச்சரை விட அவரது மனைவியிடம் ரூ.30 லட்சம் கூடுதலாக உள்ளது.நிதித்துறையை கவனிக்கும் துணை முதல்வர் மோடியிடம் ரூ.25.78 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், அவரது மனைவி ஜேஎஸ் மோடியிடம் ரூ.29.84 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் உள்ளன.

பீகார் மாநில முதல்வருக்கு நெருக்கமான அமைச்சர் விஜய் குமார் சௌபேயிடம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், அவரது மனையிடம் ரூ.20.28 லட்சம மதி்ப்புள்ள அசையும் சொத்துக்களும் உள்ளன. சுற்றுலாத் துறை அமைச்சர் சுனில் குமார் பின்டுவிடம் ரூ.20.09 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்களும், அவரது மனைவியிடம் ரூ.40.45 லட்சத்திற்கும் அதிகமான சொத்துக்களும் உள்ளன. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஹித் அலி கானும், நரேந்திர சிங்கும் தங்கள் குடும்ப சொத்துக்கள் பிரிக்கப்படவில்லை என்று கூறி அதன் விவரங்களை வெளியிடவில்லை.

நிதிஷ் குமார் அமைச்சரவையில் உள்ள 3 பெண் அமைச்சர்களான பர்வீன் அமானுல்லா(சமூக நலத்துறை), ராணி(தொழில்துறை) மற்றும் சுக்தா பாண்டே(கலை மற்றும் கலாச்சாரம்) ஆகியோரும் தங்கள் கணவன்மார்களைவிட அதிக சொத்துக்கள் வைத்துள்ளனர்.நில சீர்திருத்தம் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ரமாய் ராமிடம் ரூ.1.25 கோடி மதி்பபுள்ள சொத்துக்களும், மோடியிடம் ரூ.1.6 கோடி மதிப்புள்ள சொத்துக்களும், முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அவரது மகனிடம் ரூ.1.62 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் உள்ளன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...