|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 January, 2012

ஆடு, மாடுகளுக்கு அரிசி உணவு கொடுப்பது மிகவும் ஆபத்தானது!

ஆடு, மாடுகளுக்கு அரிசியிலான மாவு, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகளை தரக்கூடாது என கால்நடை மருத்துவர் எச்சரித்துள்ளார். தற்போதைய பனிக்காலத்தில் கால்நடைகளுக்கும் மனிதர்களை போல் சளி பிரச்னை ஏற் பட வாய்ப்புகள் அதிகம். எனவே ஆடு, மாடு உள் ளிட்ட கால்நடைகளை வளர்ப்போர் அவற்றை இரவு வேளைகளில் வெட்டவெளியில் கட்டிப் போடாமல் கொட்டகை அமைத்து கட்டிப் போட வேண்டும். சளி ஏற்பட்டால் வாய்பகுதியில் புண்கள் உருவாகி இலை, தழைகளை உண்ண முடியாமல் திணறும். வயிற்றோட்டம் ஏற்பட்டு தொடர் கழிச்சல் உண்டாகும். அந்த நேரங்களில் இவைகளுக்கு தண்ணீர்சத்து குறையும். நீர் சத்து குறைந்தால் ஓரிரு நாட்களில் அவை உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சமயங்களில் அவற்றை பட்டினி போடக்கூடாது.  கஞ்சி தண்ணீர் அடிக்கடி கொடுத்து வரவேண்டும். மேலும் குளுக்கோஸ் தண்ணீரும் கொடுத்தால் நீர்சத்து குறையாது. எண்ரேசீன் சொட்டுமருந்து கொடுக்கலாம். பொதுவாக ஆடு, மாடுகளுக்கு கழிச்சல் ஏற்பட காரணமே அரிசி வகை உணவுகள் தான். அரிசி மாவு, சர்க்கரை பொங்கல், கேசரி உள் ளிட்ட இனிப்பு வகைகளும் தரக்கூடாது. 

அப்படி கொடுத்தால் வயிற்றில் புளிப்புத்தன்மை அதிகரித்து அவை இறந்து போய் விடும். அதே நேரத்தில் கோதுமை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களை கொடுக்கலாம். தை பொங்கல் நேரத்தில் ஏராளமானோர் ஆடு, மாடுகளுக்கு சர்க்கரை பொங்கல் தருவது வழக்கம். எனவே அந்த நேரத்தில் கால்நடைகள் உயிரிழப்பது அதிகரிக்கிறது. தற்போது அரசு இலவச ஆடு, மாடுகளை வழங்கி வருகிறது. இவற்றை பயனாளிகள் தங்கள் சொத்தாக நினைத்து பராமரிக்க வேண்டும். பராமரி ப்பின்மை, கவனக்குறைவு போன்றவையே கால்நடைகள் உயிரிழக்க முக்கிய காரணங்களாக அமைகின்றன.  எனவே கால்நடைகளை நல்ல முறையில் பராமரித்து கால்நடை மருத்துவர்களுக்கு கூடுதல் ஒத்துழைப்பு தரவேண்டும்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...