|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 January, 2012

நேதாஜி தமிழனாக பிறக்கவே விரும்பினார் தமிழருவி மணியன்!

நாடு முழுவதும் இந்திய விடுதலைப் போராட்ட தலைவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களின் 119வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.நாமக்கல் நகரில், நேதாஜியின் முழு உருவச்சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது. திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் தலைவர் லட்சுமிகாந்தன் பாரதி நேதாஜியின் சிலையை திறந்து வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவிமணியன் பேசும்போது,இந்தியாவின் சுதந்திரத்துக்கு காந்தியடிகள் அறவழியில் போராடினார், நேதாஜி இராணுவ ரீதியில் போராடினார். ஆனால், இருவரின் நோக்கமும் ஒன்று தான். சுதந்திர இந்தியாவை பார்க்கவேண்டும் என்று அவர்கள் இருவருமே ஆசைப்பட்டனர்.

சிறந்த கல்வியாளரான நேதாஜி, மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதற்காகவே ஐ.சி.எஸ் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினார். அகில இந்திய அளவில் நான்காவது இடம் பிடித்து வெற்றியும் பெற்றார். ஆனால், அடிமைப்பட்டு கிடக்கும் இந்தியாவை மீட்பது தான் முதல் வேலை என்று முடிவு செய்த நேதாஜி ஆங்கில அரசின் கீழ் பணியாற்ற கூடாது என்ற நோக்கத்தில் வேலைக்கு செல்லாமல் காந்தியடிகளை சந்தித்து இந்திய விடுதலைப் போரில் கலந்து கொண்டார். 1920 ம் வருடம் முதல், 1940 ம் வருடம் வரையில் 11 முறை சிறைக்கு சென்றுள்ளார் நேதாஜி. பல ஆண்டுகள் காந்தியுடன் இருந்து போராடினார், கடைசியில் காந்திய வழியில் போராடினால், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்காது என்று முடிவெடுத்த நேதாஜி ஆயுதப்போருக்கு சென்றார். அப்போது அவருக்கு தோள் கொடுத்து நின்றவர்கள் தமிழர்கள்தான்.

நேதாஜி நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய பெரும்பாலான வீரர்கள் தமிழர்கள், அதன் தளபதிகளில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். நேதாஜி அவர்கள் மூன்று மொழிகளில் பத்திரிகை நடத்தினார். அந்த பத்திரிகைகள் ஆங்கிலம், இந்துஸ்தானி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளிவந்தது. அப்படியானால், நேதாஜி எந்த அளவுக்கு தமிழுக்கும், தமிழர்களுக்கும் முக்கியம் கொடுத்துள்ளார் என்பது உங்களுக்கு புரியவேண்டும்.இந்திய விடுதலை போரில் தமிழர்களின் அர்ப்பணிப்பை பார்த்து வியந்த நேதாஜி, எனக்கு அடுத்த முறை பிறப்பு இருக்குமானால், தமிழனாக பிறக்கவே விரும்புகிறேன் என்று அறிவித்தார். இந்திய விடுதலையில் தமிழர்களின் பங்கு பெரியது, விடுதலை போரில் நேதாஜியுடன் ஆயுதம் தங்கி போராடியவர்கள் அதிகம் பேர் தமிழர்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது என்றார் தமிழருவிமணியன்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...