|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 April, 2012

ஆராய்ச்சி நிலையங்களில் பரிசோதனைகளுக்கு, உயிருள்ள விலங்குகளைப் பயன்படுத்த சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் தடை!


கல்விக்கூடங்கள் மற்றும் இதர ஆராய்ச்சி நிலையங்களில் பரிசோதனைகளுக்கு, உயிருள்ள விலங்குகளைப் பயன்படுத்த சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் தடை விதித்துள்ளது.உடலை அறுத்து சோதனையிடல், மருந்து சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு விதமான நடைமுறை சோதனைகளுக்கு, பல கல்வி நிலையங்கள் மற்றும் பல்வேறுவிதமான ஆராய்ச்சி மையங்களில், உயிருள்ள விலங்குகள் பயன்படுத்தப்படுகின்றன.ஆனால் இதுபோன்ற சோதனைகளுக்கு, இனிமேல் உயிருள்ள விலங்குகளைப் பயன்படுத்தக்கூடாது என்று தடைவிதித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், அதற்கு பதிலாக கணினி மாதிரிகள் போன்ற மாற்று அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது.
இதுதொடர்பான வழிகாட்டுதல்கள், பல்கலைக்கழக மானியக்குழு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், இந்திய மெடிக்கல் மற்றும் பார்மசி கவுன்சில்கள் போன்றவைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மிருகவதை தடுப்பிற்கான சட்டம் 1960, பிரிவு 15ன் படி இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.இதுதொடர்பாக, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பில் கூறப்படுவதாவது: மிருகங்களுக்கு இழைக்கப்படும் தேவையற்ற சித்ரவதைகள் மற்றும் கொடுமைகளைத் தடுக்கும் கடமை மத்திய அரசுக்கு உண்டு. உயிருள்ள விலங்குகளை நேரடியாக பரிசோதனை செய்யும் முறைகளுக்கு மாற்றாக இருக்கும் சிடி, கணினி மாதிரிகள் மற்றும் காட்சி மாதிரிகள் போன்றவை அனாடமி மற்றும் பிசியாலஜி கற்பித்தலில், சிறந்த மாற்றுகளாக மட்டுமின்றி, உயர்ரக கற்கும் கருவிகளாகவும் பயன்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...