|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 April, 2012

இயக்குநர் சங்கத்துக்காக தனி இணையதளம்!

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்காக பிரத்யேகமான இணையதளம் மற்றும் வெப் டி.வி. தொடங்கப்பட்டுள்ளது.இது குறித்த அறிமுக நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர்கள் சங்கச் செயலாளர் அமீர், பொருளாளர் எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் சென்னையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:இயக்குநர் சங்கத்துக்கு என ஏற்கெனவே இணையதளம் இருந்தபோதும் அது முறையாக செயல்படவில்லை. அதனால் நவீன தொழில்நுட்பத்துடன் ஏராளமான தகவல்களை உள்ளடக்கி புதிய வடிவில் இணையதளத்தைத் தொடங்கியுள்ளோம். www.tantis.in என்ற இந்த இணையதளமும் திரைப்படத்துறை குறித்த செய்திகள் அடங்கிய 24 மணி நேர வெப் டி.வி.யும் வரும் ஏப்ரல் 20-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.


இந்த இணையதளத்தில் திரைப்பட இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் ஆகியோருக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் இருக்கும். இயக்குநர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள அனைவரைப் பற்றிய முழுத் தகவல்களும் இதில் இடம்பெற்றிருக்கும்.மேலும் சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு ஒரு படத்தை எப்படி அனுப்புவது, ஓர் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையேயான ஒப்பந்தம் அமைக்கப்பட வேண்டிய விதம், உறுப்பினர்களுக்கு உள்ள அடிப்படை உரிமை, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், உதவித் தொகை, இயக்குநர் சங்க செயல்பாடுகள் உள்ளிட்ட ஏராளமான தகவல்களும் இதில் இடம்பெற்றிருக்கும்.24 மணி நேர வெப் டி.வி.யில் டிரெய்லர்கள் இலவசமாகவும், தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதத்தில் விளம்பரங்கள் மிகக் குறைந்த கட்டணத்திலும் ஒளிபரப்பப்படும் என்றனர்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...