|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 October, 2011

4.9 லட்சம் பேருக்கு விசா வழங்கியுள்ளது அமெரிக்கா!

நடப்பு நிதியாண்டில், 4.9 லட்சம் பேருக்கு தற்காலிக அமெரிக்க விசா வழங்கப்பட்டுள்ளது. கல்வி, சுற்றுலா, வர்த்தகம் உள்ளிட்ட காரணங்களுக்காக அமெரிக்கா செல்வோரின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்த காரணங்களுக்காக விண்ணப்பித்த 4 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு, அமெரிக்க தூதரகம், நடப்பு நிதியாண்டில் விசா வழங்கியுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4.3 சதவீதம் அதிகம். டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா, ஐதராபாத் ஆகிய அமெரிக்க தூதரக அலுவலகங்கள் மூலம், இந்த விசா வழங்கப்பட்டுள்ளது. விசா வேண்டி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 60 சதவீத ஊழியர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளனர். விசா நேர்காணல் மொழியை, விண்ணப்பத்தாரர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளில் தேர்வு செய்யவும் தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...