|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 October, 2011

72 அடி நீளத்தில் தயாரான பிரமாண்ட தேசியக்கொடி: ஜெய்ப்பூரில் பறக்க விடப்பட்டது!


இந்தியாவில் இதுவரை இல்லாதபடி மிகப்பிரமாண்டமான தேசியக்கொடி ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தேசியக்கொடி 48 அடி அகலமும் 72 அடி நீளமும் கொண்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த கொடி தயாரிக்கப்பட்டது. ஆனால் தேசியக்கொடியை பகல்- இரவு என்று 24 மணி நேரமும் பறக்க தடை இருந்தது.
 
இதை எதிர்த்து குருஷேத்திரா தொகுதி எம்.பி. நவீன் ஜிண்டால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த கோர்ட்டு தேசியக்கொடியை பகல், இரவில் எப்போதும் பறக்க விடலாம் என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து மத்திய உள்துறையும் இந்த பிரமாண்ட தேசியக்கொடியை பகல், இரவு எப்போதும் பறக்க விடலாம் என்று அனுமதி கொடுத்தது.
 
இந்த நிலையில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் அந்த பிரமாண்ட தேசியக்கொடி பறக்க விடப்பட்டது. அங்குள்ள சென்டிரல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அந்த கொடியை ராஜஸ்தான் முதல்- மந்திரி அசோக் கெலாட் ஏற்றி வைத்தார். 100 அடி உயர கம்பத்தில் அந்த பிரமாண்ட தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இரவில் அந்த தேசியக்கொடி பறப்பதை கண்டு ரசிக்கும் வகையில் மின்னொளி வசதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...