|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 October, 2011

தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு பூப்புனித நீராட்டு விழா!

தமிழகத்தில் முதன்முறையாக திருச்சி அருகே திருநங்கைக்கு பூப்புனித நீராட்டு விழா நடந்தது.   வட மாநிலங்களில் திருநங்கைகளை ஒரு பெண்ணாக பாவித்து அவர்களுக்கு பூப்புனித விழா, வளைகாப்பு உள்ளிட் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு நடத்தப்படும் விழாக்கள் ஒரு பெண்ணுக்கு நடத்தப்படுவது போன்று நடத்தப்படுகிறது. இதனால் திருநங்கைகளுக்கு தங்களை பிறர் பெண்ணாக பாவிக்கிறார்கள் என்ற மனநிறைவு கிடைக்கும். வட மாநிலங்களில் சகஜமாக நடத்தப்படும் இதுபோன்ற விழாக்கள் தமிழகத்தில் அவ்வளவாக நடத்தப்படுவது கிடையாது. தமிழகத்தில் முதன் முறையாக திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூரில் திருநங்கை ஒருவருக்கு பூப்புனித நீராட்டு நடத்தப்பட்டது. சாந்தினி என்ற திருநங்கைக்கு மற்ற திரு நங்கைகள் பூப்புனித நீராட்டு விழா நடத்தினர். உறவு முறைகளை வகுத்து கொண்டு ஒரு பெண்ணுக்கு எப்படி தமிழக கலாச்சாரபடி சடங்கு செய்வார்களோ அதே போன்று சடங்கு செய்யப்பட்டது.   15 தட்டுகளில் வெற்றிலை, பூ, புடவை உள்ளிட்ட 15 வகையான மங்கலப் பொருட்களை கொண்டு திருநங்கை சாந்தினிக்கு மஞ்சள் பூசி சடங்கு நடந்தது. பின்னர் முறைப்படி புட்டு செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. முன்னதாக சீர்வரிசை பொருட்களுடன் ஏராளமான திரு நங்கைகள் கும்மியடித்தும், ஆடிப்பாடியும் ஊர்வலமாக வந்தனர். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...