|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 November, 2011

ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் 15 வெற்றிகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார் செபாஸ்டியன் வெட்டல்!.


ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் 15 வெற்றிகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார் ரெட்புல் கார் டிரைவரான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல்.  முன்னாள் உலகச் சாம்பியனான இங்கிலாந்தின் நிகெல் மான்செல் 1992-ம் ஆண்டில் 16 சுற்றுகளைக் கொண்ட கார் பந்தயத்தில் 14 சுற்றில் வெற்றி கண்டதே கடந்த 19 ஆண்டுகளாக சாதனையாக இருந்தது. இப்போது அதை வெட்டல் முறியடித்துள்ளார். ஏற்கெனவே இந்த சீசனில் வெட்டல் சாம்பியன் பட்டத்தை வென்றுவிட்டார். 

 இந்த சீசன் எஃப் 1 போட்டிக்கான கடைசி சுற்று (19-வது சுற்று) பிரேசிலில் சனிக்கிழமை நடைபெற்றது. பிரேசில் கிராண்ட்ப்ரீ என்ற பெயரில் நடைபெற்ற இந்த சுற்றில் முதலிடம் பிடித்ததன் மூலம் 15-வது வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்தார் வெட்டல். 4.3 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை 1 நிமிடம் 11.918 விநாடிகளில் கடந்தார்.ரெட்புல் அணியின் மற்றொரு டிரைவர் மார்க் வெப்பர் (1:12.099 நிமிடம்) 2-வது இடத்தையும், மெக்லாரன் டிரைவர் ஜென்சன் பட்டன் (1:12.283) 3-வது இடத்தையும், மெக்லாரனின் மற்றொரு டிரைவர் லீவிஸ் ஹாமில்டன் (1:12.480) 4-வது இடத்தையும், இரண்டு முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்ற ஃபெராரி பெர்னாண்டோ அலோன்ஸô 5-வது இடத்தையும் பிடித்தனர். 

 இந்த சீசன் எஃப் 1 போட்டியில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற 19 சுற்றுகளில் ஸ்பெயின், இங்கிலாந்து, ஜெர்மனி, தென் கொரியா போட்டிகளில் மட்டுமே முதலிடத்தை தவறவிட்டார் வெட்டல். ஜெர்மனி போட்டியில் மட்டும் 3-வது இடத்தைப் பிடித்தார். இது அவரின் மிகப்பெரிய பின்னடைவாகும். அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் டயரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முதல் சுற்றிலேயே விலகினார். அந்த சுற்றில் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.  19 சுற்றுகளின் முடிவில் மெக்லாரன் டிரைவர் ஜென்சன் பட்டன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அவரைவிட 10 புள்ளிகள் குறைவாகப் பெற்ற ஃபெராரி டிரைவர் அலோன்ஸô 3-வது இடத்தையும், 18 புள்ளிகள் குறைவாகப் பெற்ற ரெட்புல் அணியின் மற்றொரு டிரைவர் மார்க் வெப்பர் 4-வது இடத்தையும் பிடித்தனர். அணி பிரிவில் ரெட்புல் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மெக்லாரன் இரண்டாவது இடத்தையும், ஃபெராரி 3-வது இடத்தையும் பிடித்தன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...