|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 November, 2011

எங்களுடைய வாக்கை வாங்கி ஆட்சி அமைத்து, எங்களையே முடக்குவது என்பது எவ்வளவு கொடுமை சீமான்!


19 11 2011 முதல் இனம் காக்க உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை போற்றும் வகையில் தமிழர் எழுச்சி வார நிகழ்வை ஒரு வாரத்திருக்கு நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்து இருந்தது, இதன் முதற்கட்டமாக 19 11 2011 அன்று வில்லிவாக்கத்தில் நடைபெற இருந்த பொது கூட்ட அனுமதியை திடீரென ரத்து செய்தது தமிழக காவல்துறை. அது மட்டுமல்லாமல் டிசம்பர் 6ம் தேதி வரை நாம் தமிழர் நடத்தும் எந்த கூட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை, தடை செய்யப்பட்ட இயக்கத்தை பற்றி பிரச்சாரம் செய்வது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் என காவல்துறை காரணம் கூறியும் பல்வேறு காரணங்களை கூறியும் நாம் தமிழர் எழுச்சி வார நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் உள்ளரங்கங்களின் அந்நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 25.11.2011 அன்று சென்னை அம்பத்தூரில் உள்ள ‘ஆஸ்ஸி’ பள்ளி மைதானத்தில் நடந்த நாம் தமிழர் குடும்ப விழாவில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அவர் பேசுகையில், என்ன உங்கள் பிரச்சனை. சீமானை பேசவிட்டால் விடுதலைப்புலிகளை ஆதரிச்சுப் பேசுவான். சீமானை பேசவிட்டால் தடை செய்யப்பட்ட இயக்கத்தை பற்றி பேசுவான். உன்னை யார் தடை செய்ய சொன்னது. தடையை நீக்கு என்கிறோம். நாங்கள் ஆதரித்து பேச வேண்டும் தடையை நீக்கு என்கிறோம். முதலில் அதை புரிந்துகொள்ளுங்கள். 

ஒரு பொது வாக்கெடுப்பை இந்த நாட்டில் இந்த அரசுகள் செய்யுமா. விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை தேவையா இல்லையா. ஒரு வாக்கெடுப்பை நடத்துமா. 100க்கு 99 விழுக்காடு விடுதலைப்புலிகள் மீதான தடை தேவையில்லை என்று மக்கள் வாக்கு செலுத்துவார்கள். நீங்கள் எல்லாவற்றையும் எங்களுக்குள் திணிக்கிறீர்கள்.  விடுதலைப்புலிகளை பிறந்ததிலிருந்து ஆதரிச்சு பேசுகிறேன். என் ஆத்தா பேசுறாள். என் அப்பன் பேசுறான். என்னுடன் பிறந்தவன் அத்தனைப் பேரும் பேசுறான். என் உயிர் தமிழ்ச் சொந்தங்கள் அத்தனை பேரும் பேசுறான். அனுமதி கொடுக்கவில்லை என்றால் ஆதரிச்சு பேசிட மாட்டேனா. பிரபாகரன் பிறந்த நாளை ரோட்டில் கொண்டாடவில்லை. ஒவ்வொரு தமிழனும் வீட்டில் கொண்டாடிக்கொண்டிருக்கிறான். 

உங்களுக்கு என்ன தெரியும், பிரபாகரனை யார் என்று தெரியுமா? என்ன தெரியும். மாவீரர் தினம் கொண்டாடிவிடுவார்கள். சுவரொட்டி ஒட்டக் கூடாது. மாவீரர் தினம் கொண்டாட அனுமதியில்லை. ஏன். என் இனத்தின் மானத்தையும், என் இனத்தையும் காப்பாத்த செத்தான்ல்ல அதுக்காக கொண்டாடிவிடக் கூடாது. என் நாடு. என் பூமி. மானத் தமிழர்கள் வாழுகிற பூமி. என் இனத்தின் மானத்தை காக்க செத்தவனுக்கு நான் நன்றி சொல்லக்கூட இந்த மண்ணில் உரிமை இல்லை. இத்தனை கூட்டங்கள் நாங்கள் நடத்தியிருக்கிறோம். 21 ஆண்டுகளாக விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து, பல்வேறு தலைவர்கள், பல்வேறு கட்சிகள் பேசியிருக்கிறார்கள். அதனால் இந்த மண்ணில் நடந்த ஏதாவது ஒரு அசம்பாவிதத்தை நீங்க சொல்லுங்க. பிறகு இந்த கூட்டத்துக்கு தடை போடுங்கள். ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுடைய சட்டம், உங்களுடைய செயல்பாடுகளை முடக்கும். என்னுடைய பேச்சை நீங்கள் தடை செய்யலாம். ஆனால் என்னுடைய உணர்வையும், என்னுடைய கனவையும் எந்த சட்டமும் தடை செய்ய முடியாது. அதை நீங்க புரிந்து கொள்ள வேண்டும். 

நீங்கள் ஒவ்வொரு தடைவையும் இதை செய்துக்கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் ஒவ்வொரு தடைவையும் பணிந்து பணிந்து போவோம் என்று எதிர்பார்த்துக்கிட்டு இருக்கீங்க. இதுவெல்லாôம் சாத்தியமில்ல. குறைந்தபட்சமாவது ஒரு கட்டுப்பாடுகளை போட்டாவது கூட்டம் நடத்த அனுமதிச்சிருக்க வேண்டும்.  இது உண்மையிலேயே ஜனநாயக நாடா. அமெரிக்காவில் தடை இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தடை இருக்கிறது. பிரான்சில் தடை இருக்கிறது. கனடாவில் தடை இருக்கிறது. ஜெர்மனில் தடை இருக்கிறது. ஆனால் எல்லா நாடுகளிலும் தலைவர் பிறந்த நாளும், மாவீரர் தினமும் எழுச்சியாக் கொண்டாட அந்த நாடுகள் அனுமதிக்கிறது. ஏன். அந்த நாடுகள் கருத்து சுதந்திரம் உள்ள நாடு. இந்தியா கருத்து சுதந்திரமற்ற ஒரு சர்வாதிகார நாடு. 

இதில் தமிழர்களுக்கென்று ஒரு அரசு இருக்கிறது. எந்த தமிழனும் தமிழராக இருக்கக்கூடாதுன்னு சொல்றத்துக்கு ஒரு அரசு இருக்கிறது. இதைவிட ஒரு கேவலம். இதைவிட ஒரு இழிநிலை எதுவுமே இருக்க முடியாது. இந்த மண்ணின் மகன், ஒரு தமிழன் தன்னை தமிழன் என்று சொல்வதே தேசத் துரோக குற்றம் என்று சொன்னால் இதைவிட கொடுமை எங்கே இருக்கிறது. எங்களுடைய வாக்கை வாங்கி அதில் வலிமையைப் பெற்று ஆட்சியை அமைத்து, அதிகாரங்களை பெற்றுக்கொண்டு, எங்களிடமே அதைக்காட்டி, எங்களை நசுக்குவது, எங்களையே முடக்குவது என்பது எவ்வளவு கொடுமையானது. கடலூரில் கூட்டம் நடத்தக் கூடாது. ஏன். அங்க டிரைனேஜ் தோண்டிக்கிட்டு இருக்காங்களாம். கழிவு போவதற்கு கால்வா. அது தடைப்பட்டுவிடுமாம். என்னடா காலக்கொடுமையா இருக்குது. இதெயெல்லாம் முதல்ல நிறுத்திகிருங்க. எங்களை ஒருபோதும் நாங்கள் மாத்திக்கொள்ள முடியாது. அதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். இவ்வாறு பேசினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...