|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 November, 2011

மாவீரர் தினம் கொண்டாடிய ஈழ ஆதரவாளர்கள் கைது!


மாவீரர் தினத்தையொட்டி அஞ்சலி செலுத்துவதற்காக திருச்சி மாவட்டத்தில் ஈழ விடுதலை ஆதரவு கட்சிகளான புதிய தமிழகம் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பெரியார் பாசறை, பெரியார் தத்துவ மையம், ஆதி தமிழர் பேரவை ஆகியவை இணைந்து, திருச்சி மாநகரில் அஞ்சலி செலுத்துவதற்காக 5 இடங்களுக்கு மேல் 10 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்டு காவல்துறைக்கு கடிதம் கொடுத்திருந்தனர். ஆனால், சம்மந்தப்பட்ட காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள் நாங்கள் அனுமதி கொடுக்க முடியாது என்றும், மாவட்டகாவல்துறை ஆணையரை சந்தித்து அனுமதி பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டனர். மாநகர காவல்துறை ஆணையரோ மேலிடத்தில் இருந்து ஈழ சம்மந்தமான பிரபாகரன் படங்களை வைக்கக் கூடாது என்று உத்தரவு உள்ளதால், அனுமதி கொடுக்க முடியாது என மறுத்ததோடு, மாநகர துணை காவல்துறை ஆணையரை பாருங்கள் என்று கூறியதும், அவரை சந்தித்தால், நாட்களை கடத்தி குறிப்பிட்ட தேதிக்கு முதல் நாள் அனுமதி கிடையாது என்று தெரிவித்துவிட்டார் என்று ஈழ ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...