|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 November, 2011

தமிழக வீரர் அஸ்வினுக்கு திலீப் சர்தேசாய் விருது...

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி, 

இந்திய அணி 2-0 கணக்கில் வெற்றி பெற உதவிய தமிழக வீரர் அஸ்வினுக்கு 

திலீப் சர்தேசாய் விருது வழங்கப்பட உள்ளது. அறிமுகமான முதல் டெஸ்ட் 

போட்டியிலேயே 9 விக்கெட்கள் வீழ்த்தியதின் மூலம், சாதனை பட்டியலில் 

இடம்பிடித்தார். இத்தொடரில், 22 விக்கெட்கள் மற்றும் 1 சதம் என கலக்கிய 

அஸ்வினுக்கு திலீப் சர்தேசாய் விருது வழங்கப்பட உள்ளது. டிசம்பர் 10ம் தேதி 

நடைபெற உள்ள விழாவில், ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் கேடயம் கொண்ட 

இவ்விருது அஸ்வினுக்கு வழங்கப்படுகிறது. திருமணமான மறுநாளில், 

போட்டியில் பங்கேற்றதன் மூலம், கிரிக்கெட்டின் கடவுளாக வர்ணிக்கப்படும் 

டான் பிராட்மேன் வரிசையில் அஸ்வினும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...