|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 November, 2011

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கோடாரியால் வெட்டி கொலை செய்த மனைவி!


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கோடாரியால் வெட்டி கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.  சித்தூர் மாவட்டம் சோமல மண்டலம் எர்ர நாதுலவாரிப்பள்ளியை சேர்ந்தவர் பாஸ்கர் (28), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுசீலா (23). சிடிஎம் சாலையில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனர்.  இந்நிலையில் சுசீலாவுக்கும், அதே வீட்டில் குடியிருக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளதொடர்பு ஏற்பட்டுள்ளது. மனைவியை பாஸ்கர் கண்டித்தார். ஆனால், சுசீலா கள்ளதொடர்பை கைவிடவில்லை. இதனால் அந்த வீட்டை காலி செய்துவிட்டு புங்கனூர் தியாகராஜ தெருவில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு பாஸ்கர் வீடு திரும்பினார். 

அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் சுசீலாவுடன் அந்த வாலிபர் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதைக்கண்ட பாஸ்கர், அந்த வாலிபரை விரட்டிவிட்டு மனைவியை கண்டித்தார். இந்நிலையில் நேற்று பாஸ்கரின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்த அக்கம் பக்கத்தினர், கோடாரியால் வெட்டப்பட்டு பாஸ்கர் துடிதுடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்து வழக்கு பதிந்து சுசீலாவிடம் தீவிரமாக போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் சுசீலா, அளித்த வாக்குமூலம்: 

’’கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் எனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி நள்ளிரவில் கள்ளக்காதலனுக்கு போன் செய்து வரவழைத்தேன். அவர், சில ஆட்களை அழைத்து வந்தார். தூங்கிக்கொண்டிருந்த கணவரை கோடாரியால் வெட்டியும், தலையை உருட்டுக்கட்டையால் தாக்கியும் கொலை செய்தோம். இதையடுத்து சுசீலாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கள்ளக்காதலன் மற்றும் கொலையாளிகளை தேடிவருகின்றனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே, கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...