|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 November, 2011

தானம் கொடுக்க உயிரை விட்ட காதல் ஜோடி!

சென்னையை சேர்ந்த காதல் ஜோடி ஒன்று வேளாங்கண்ணிக்கு சென்று சுற்றிப்பார்த்தனர். அதன்பிறகு தங்கள் உடலை மருத்துவக் கல்லூரிக்கு அளிக்கும்படி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

சென்னை, பள்ளிக்கரணையில் உள்ள காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் அருள்ராஜ்(40). அவர் அதே பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணை காதலித்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அந்த பெண்ணுடன் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றார். அங்கு ஒரு தனியார் விடுதியி்ல் அறை எடுத்து தங்கிய 2 பேரும் வேளாங்கண்ணியை சுற்றிப் பார்த்தனர்.

நேற்று முன்தினம் மதியம் சுற்றுலா முடித்துவிட்டு, விடுதி அறைக்கு திரும்பிய இந்த ஜோடி பின்னர் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. நேற்று காலை வரை அறை கதவை திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த விடுதிப் பணியாளர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வேளாங்கண்ணி போலீசார் விடுதிக்கு சென்று காதல் ஜோடி தங்கிருந்த அறையை திறந்து பார்த்தனர்.

அப்போது அறை படுக்கையில் அருள்ராஜும், அந்த இளம்பெண்ணும் பிணமாகக் கிடந்தனர். அவர்கள் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறையில் 2 பேரும் தற்கொலை செய்து கொள்ளும் முன் எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கண்டெடுத்தனர்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, நாங்கள் ஓடி வந்து திருமணம் செய்து கொண்டோம். 2 பேருக்கும் வயது வித்தியாசம் உள்ளது. ஒரே இடத்தில் வசித்த போது, எங்களுக்குள் இல்லாத உறவை இருப்பதாக கூறி எங்களை கேவலமாக பேசினர். இதனால் கோபமடைந்த நாங்கள் ஓடி வந்தோம். இது தப்பு என்று தெரிந்தே வந்தோம்.

தப்புக்கு தண்டனையாக தான் இந்த முடிவை எடுத்தோம். இதற்கு நாங்கள் யாரையும் குறைக் கூற தயாராக இல்லை. எந்த முடிவு எடுக்கவும் எங்களுக்கு உரிமை உண்டு. எங்கள் கடைசி விருப்பத்தை இந்த கடிதம் மூலம் உறுதிப்படுத்துகிறோம்.நாங்கள் இறந்த செய்தியை எங்கள் வீட்டாரிடம் தெரிவித்துவிடுங்கள். ஆனால்

எங்கள் உடலை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எங்கள் உடல்கள் பயன் உள்ளதாக இருக்க வேண்டும். எங்கள் உடல்கள் மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படும் வகையி்ல் மருத்துவக் கல்லூரிக்கு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையி்ல் செல்கிறோம். எங்கள் துணிகளை ஏழைகளுக்கு கொடுத்து விடுங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...