|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 November, 2011

சவுந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படம் கோச்சடையான்!

ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்த ராணா' படம், கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய முதல்நாளே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 2 மாதங்கள் சிங்கப்பூரில் தங்கி சிகிச்சை பெற்றபின், அவர் குணம் அடைந்தார். ராணா' படத்தில், குதிரை சவாரி உள்பட கடினமான சண்டை காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், இப்போதைக்கு அந்த படத்தில் ரஜினிகாந்த் நடிப்பது அவருடைய உடல்நலனுக்கு உகந்தது அல்ல என்று கருதுகிறார்கள். எனவே,  ராணா' படத்துக்கு முன்பாக வேறு ஒரு படத்தில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு செய்திருக்கிறார்.

இந்த படத்துக்கு,  கோச்சடையான்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது, இந்தியாவில் தயாராகும்  நடிப்பை பதிவிறக்கம்' செய்யும் முதல் 3டி படம் ஆகும். உலகிலேயே அதிக வசூலை வாரிக்குவித்த, ஜேம்ஸ் கேமரூன் டைரக்ஷனில் வெளியான  ஹாலிவுட்' திரைப்படம்,  அவதார்' மற்றும் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் டைரக்டு செய்த திரைப்படம்  டின் டின்' ஆகிய படங்கள் இதே புதிய தொழில்நுட்பத்த்தில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சரித்திர பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி, டைரக்ஷன் மேற்பார்வையை கே.எஸ்.ரவிகுமார் ஏற்றுள்ளார்.
இந்த படத்தை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தினர் தயாரிக்கிறார்கள்.டைரக்ஷன் பொறுப்பை ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா அஸ்வின் ஏற்றுள்ளார். ஆகஸ்டு 2012 ல் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. கோச்சடையான்' படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த்,  ராணா' படத்தில் நடிப்பார் என்று ஈராஸ் நிறுவனமும், சவுந்தர்யா அஸ்வினும் ரஜினிகாந்த் சார்பாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...