|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 November, 2011

சரத் பவாரை கன்னத்தில் அறைந்தவரை கைது செய்து திகார் சிறையில் அடைப்பு!

மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத் பவாரை கன்னத்தில் அறைந்தவரை போலீஸôர் கைது செய்து, திகார் சிறையில் அடைத்தனர்.  ÷மத்திய வேளாண்மைத் துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத் பவார், இலக்கிய விழா ஒன்றில் வியாழக்கிழமை பங்கேற்றார்.  அப்போது, ஹர்வீந்தர் சிங் (27) என்பவர் பவாரின் கன்னத்தில் அறைந்தார். விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பவாரை அறைந்ததாகத் தெரிவித்த அவர், சீக்கியர்கள் வைத்திருக்கும் "கிர்பான்' என்ற கத்தியால் தனது கை நரம்புகளை அறுத்துக் கொண்டார்.  ÷அவரைக் கைது செய்த தில்லி போலீஸôர், பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர். பொது ஊழியரைத் தாக்கியது, தற்கொலைக்கு முயற்சித்தது, சமுதாயத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பது ஆகிய குற்றச்சாட்டுகளை போலீஸôர் முன்வைத்தனர்.  ÷இதையடுத்து ஹர்வீந்தர் சிங்கை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் ஜஸ்ஜீத் கெüர் உத்தரவிட்டார்.  ÷கடந்த வாரம் தொலைத் தொடர்புத் துறை ஊழல் தொடர்பாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமையும் நீதிமன்ற வளாகத்தில் ஹர்வீந்தர் சிங் தாக்கியது குறிப்பிடத்தக்கது.  மறியல்:÷ஹர்வீந்தர் சிங்கை திகார் சிறைக்கு அழைத்துச் சென்றபோது, நீதிமன்ற வளாகத்தில் அவரைத் தாக்க முயற்சித்த தேசியவாத காங்கிரஸ் கட்சித் தொண்டர்களை போலீஸôர் தடுத்தனர்.  இதற்கிடையே நீதிமன்றத்துக்கு அருகே இந்தியா கேட் பகுதியில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸôர், அனைவரையும் கலைந்து போகச் செய்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...