|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 November, 2011

மைக்கேல் ஜாக்சனின் நினைவை போற்றும் வகையில் ‘இம்மார்ட்டல்’ என்ற பெயரில் ரீமிக்ஸ் ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.

வசீகரிக்கும் குரலாலும் அதிரடி நடனத்தாலும் உலகம் முழுவதும் கோடானுகோடி ரசிகர்களை வசப்படுத்தியவர் மைக்கேல் ஜாக்சன்.கடந்த 2009&ம் ஆண்டு ஜூன் 25&ம் தேதி 50&வது வயதில் இறந்தார். அவருக்கு இசை அஞ்சலி செலுத்தும் வகையில் ‘இம்மார்ட்டல்’ (இறவாப் புகழ் கொண்டவன்) என்ற பெயரிலான ஆல்பம் வெளிவந்துள்ளது.

அமெரிக்காவில் சோனி மியூசிக் குழுமத்தை சேர்ந்த எரிக் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது. இதில் மைக்கேல் ஜாக்சனின் 20 பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளன.  பிரபல பாடகர் ஜஸ்டின் டிம்பர்லே, பாடகி ரிஹானா ஆகியோரும் இதில் பாடியுள்ளனர். உலகின் பல நாடுகளிலும் கடந்த 18&ம் தேதி தொடங்கி நேற்று வரை இந்த ஆல்பம் வெளியாகியுள்ளது. ஜாக்சன் இறந்த பிறகு வரும் 8&வது ரீமிக்ஸ் ஆல்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது 60 பாடல்களை ரீமிக்ஸ் செய்து நேரடி இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...