|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 December, 2011

பென்னி குக் பேரவை சார்பில் டிசம்பர் 7ம் தேதி பத்து கிராமத்தினர் கூடி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்!


முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும், புது அணை கட்ட வேண்டும் என்று கூறி வரும் கேரளாவைக் கண்டித்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள பாலாறுப்பட்டியில் பென்னி குயிக் பேரவை சார்பில் டிசம்பர் 7ம் தேதி 10 கிராம மக்கள் சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஜான் பென்னி குயிக். இவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர், ராணுவப் பொறியாளர். இந்த அணையால் தமிழக, கேரள மக்கள் பெருமளவில் பயன் பெறுவார்கள் என்பதற்காக போராடி அணையைக் கட்டினார். இதற்குத் தேவையான பணத்தைத் திரட்ட தனது சொத்துக்களையெல்லாம் விற்று பணம் திரட்டிக் கொண்டு வந்து அணையைக் கட்டி முடித்தார்.இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் பல வீடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு முதல் பெயராக பென்னி குயிக்கின் பெயரை வைக்கும் வழக்கம் இன்றும் கூட நடைமுறையில் உள்ளதைக் காணலாம்.

இந்த நிலையி்ல் போடி நாயக்கனூர், பாலாறுப்பட்டியில் உள்ள பென்னி குக் பேரவை சார்பில் டிசம்பர் 7ம் தேதி அக்கிராமத்தில் பத்து கிராமத்தினர் கூடி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கின்றனர். இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் பாலாறுப்பட்டியில் நடந்தது. அக்கூட்டத்திற்குப் பின்னர் பேரவைத் தலைவர் ஆண்டி கூறுகையில், கூலையனூர், குச்சனூர், பாலாறுப்பட்டி உள்பட 10 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கேரளாவுக்கு எங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கவுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...