|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 December, 2011

வாகனங்களை ஓட்ட அனுமதித்தால் சவூதி அரேபியாவில் கன்னித்தன்மையுள்ள பெண்களைப் பார்க்க முடியாது மத சபை எச்சரிக்கை .


 பெண்களை வாகனங்களை ஓட்ட அனுமதித்தால் சவூதி அரேபியாவில் கன்னித்தன்மையுள்ள பெண்களைப் பார்க்க முடியாது என்று அந்நாட்டு மத சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகிலேயே சவூதி அரேபியாவில் மட்டும் தான் பெண்கள் வாகனங்கள் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்களை வாகனங்கள் ஓட்ட அனுமதித்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று சவூதி மத சபையான மஜ்லிஸ் அல் இப்தா அல் ஆலாவின் முஸ்லிம் அறிஞர்கள், மன்னர் பஹ்த் பல்கலைக்கழக பேராசிரியர் கமால் சுபியுடன் சேர்ந்து ஒரு அறிக்கை தயாரித்து நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெண்களை வாகனங்கள் ஓட்ட அனுமதித்தால் நாட்டில் விபச்சாரம், போர்னோகிராபி, ஓரினச்சேர்க்கை, விவகாரத்து அதிகரித்துவிடும். மேலும் பெண்கள் வாகனங்கள் ஓட்டினால் அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டில் கன்னித்தன்மையுடைய பெண்களையே பார்க்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பேராசிரியர் கமால் சுபி அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, நான் ஒரு அரபு தேசத்தில் உள்ள காபி கடை ஒன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது அங்குள்ள பெண்கள் அனைவரும் என்னையே பார்த்தனர். ஒரு பெண் தான் ரெடியாக இருப்பதாக சைகை செய்தாள். பெண்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் இது தான் நடக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜெத்தாவில் வாகனம் ஓட்டியபோது பிடிபட்ட ஷைமா ஜஸ்தானியா (34) என்ற சவூதி பெண்ணுக்கு 10 கசையடிகள் கொடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...