|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 December, 2011

லஞ்ச அதிகாரிகளை பாம்புகளை விட்டு பயமுறுத்தி...

video
video

அரசு ஒதுக்கிக் கொடுத்த நிலத்திற்கான உத்தரவை வழங்க, லஞ்சம் தரும்படி நச்சரித்த அரசு அதிகாரிகளை, பாம்புகளை விட்டு பயமுறுத்தினார் இயற்கை வள பாதுகாப்பாளர் ஒருவர். உத்தர பிரதேச மாநிலம், பாஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹக்குள்; இயற்கை வள பாதுகாப்பாளர். இவருக்கு பாம்புகளின் மீது அலாதி பிரியம். பாம்பு பிடிப்பதை பகுதி நேர தொழிலாக செய்து வந்தார். எனவே, பாம்புகளை வளர்ப்பதற்கு தேவையான நிலத்தை ஒதுக்கித் தரும்படி, மாநில அரசுக்கு மனு செய்தார். அதை ஏற்ற மாநில அரசு, நிலத்தை ஒதுக்கித் தந்தது. அதற்கான உத்தரவை தரும்படி, மாவட்ட அதிகாரிகளை ஹக்குள் அணுகினார். அவர்களோ, இவரிடம் லஞ்சத்தை எதிர்பார்த்து, இதோ, அதோ என இழுத்தடித்தனர். இறுதியில் கொடுக்க வேண்டியதை கொடுத்தால் தான், நிலத்திற்கான உத்தரவு வழங்கப்படும் எனக் கூறி விட்டார்.இதனால், ஹக்குள் எரிச்சலடைந்தார். உள்ளூர் பத்திரிகையாளர்களிடம் நடந்த விவரத்தைச் சொல்லி புலம்பினார். அதற்கு, "பாம்புகளைப் பிடிப்பதில் வல்லவரான நீங்கள், பாம்புகளை வைத்தே லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கு பாடம் புகட்டுங்கள்' என, யோசனை கூறினர். அவர்களின் யோசனையை ஏற்ற ஹக்குள், ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பாம்புகளை, குறிப்பிட்ட அரசு அலுவலகத்திற்கு கொண்டு சென்று, அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவற்றை வெளியில் விட்டார். பாம்புகள் சீறிப் பாய்ந்து வந்ததைப் பார்த்து, அரசு அதிகாரிகள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என, ஓட்டம் பிடித்தனர்; அத்துடன் போலீசில் புகார் செய்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...