|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 January, 2012

எந்நேரமும் ஊர்வம்பு; மனைவி, மகளை படுகொலை!


அம்பத்தூரில் எப்போதும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் தினமும் சண்டை போட்டுவந்த மனைவி மற்றும் மகளை கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர். அம்பத்தூர் கருக்கு மெயின் ரோடு முத்து மதினா ரோட்டைச் சேர்ந்தவர் முத்து பழனியப்பன் (58).  இவரது மனைவி நாகவள்ளி (55), மகள் ராஜேஸ்வரி (30).  இவருக்கு திருமணமாகி பின்னர் கணவரைப் பிரிந்து தந்தை வீட்டிலேயே வசித்து வந்தார் முத்து மாணிக்கம் அம்பத்தூர் எஸ்டேட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.

வீட்டில் இருந்த நாகவள்ளியும், ராஜேஸ்வரியும் எந்நேரமும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டை போட்டதாகக் கூறப்படுகிறது. அடிக்கடி அவர்களுடன் தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முத்து மாணிக்கம் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அமைதிக்காக ராமேசுவரம், பழனி என்று புனித தலங்கள் சென்று விடுவார்.  இது போல் கோவில்களுக்கு சென்று விட்டு நேற்று நள்ளிரவு முத்து மாணிக்கம் வீட்டுக்கு வந்தார். எப்போதும் அவரை நிம்மதியாக தூங்க விடாமல் பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி தாயும் மகளும் புகார் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த முத்து மாணிக்கம், வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து மனைவியையும், மகளையும் தலையில் ஓங்கி அடித்தார். பின்னர் இருவரையும் கத்தியால் கழுத்தை அறுத்தார். இதில் இருவரும் உயிரிழந்தனர்.  அதன் பிறகு முத்துமாணிக்கமே உறவினர்களுக்கும் போலீசுக்கும் போன் செய்து நடந்த சம்பவத்தை தெரிவித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...