|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 January, 2012

வயிறு நோய் தீர்க்கும் காட்டுக்கொட்டைக் கிழங்கு!

தரிசு நிலங்களிலும், சாலையோரங்களிலும் தானே வளரும் குப்பைமேனி செடிகளில் இருந்து காட்டுக்கொட்டைக்கிழங்கு கிடைக்கிறது. இது மருத்துவகுணம் நிறைந்தது. இக்கிழங்கை யாரும் சமைத்து சாப்பிடுவதில்லை. நோய்களைத் தீர்க்கும் மருந்தாகப் பெருமளவில் பயன்படுகிறது. இதைக்கொண்டு சூரணம் செய்தும், கஷாயம் செய்தும் சாப்பிடலாம். லேகியங்கள் தயாரிக்க இக்கிழங்குகள் பயன்படுகின்றன. இதனை கிடைக்கும் கிழங்கை பேதிக்கிழங்கு, சின்னிக்கிழங்கு என்றும் கூறுவர்.

தாது விருத்தி சூரணம் இக்கிழங்கை துண்டுகளாக வெட்டி வெயிலில் நன்றாக காயவைத்து இடித்து தூளாக்கி சலித்து சூரணமாக தயாரிக்கலாம். இந்த சூரணத்தில் சிறிதளவு எடுத்து காய்ச்சிய பசும்பாலில் கலந்து சாப்பிட தாது விருத்தியாகும். போக சக்தியைத் தூண்டும். இதனால் சிறுநீரகம் தொடர்புடைய நோய்களும் தீரும். வாதம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் நீக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

சளி, கபம் குணமடையும் இந்த கிழங்கின் சூரணத்தை தேனில் குழைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர கபம் நோய் குணமடையும். இஞ்சி சாற்றுடன் இந்த சூரணத்தை கலந்து சாப்பிட கபம் குணமடையும். அஜீரணத்தால் பசியின்மை ஏற்படும். இதனால் சாப்பிடவும் பிடிக்காது. இந்த நிலையில் காட்டுக்கொட்டைக்கிழங்கின் சூரணத்தை வெந்நீரில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் போகும். அஜீரணம் சரியாகி பசி ஏற்படும். சீரகத்துடன் இத்தூளை சேர்த்து கஷாயம் போட்டும் சாப்பிடலாம்.

வயிற்றில் கசடு நீங்கும் வயிற்றில் சேர்ந்துள்ள கசடுகளை நீக்க இதனை மலமிளக்கியாகவும் மருந்தாகவும் பயன்படுத்தலாம். இக்கிழங்கை பச்சையாக அரைத்து சிறிதளவு இளஞ்சூடான நீரில் கலந்து சாப்பிட்டால் இதனால் நன்றாக பேதியாகும். வயிற்றில் உள்ள கசடுகள் வெளியேறும். வாயுக்கள் வெளிப்படும். இதனால் ஆரோக்கியம் ஏற்படும். பேதி அதிகமானலோ, பேதியை நிறுத்த வேண்டும் என்றாலோ, புளித்த மோரையோ, எலுமிச்சம் பழச் சாற்றையோ சிறிது அருந்தினால் பேதி நின்றுவிடும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...