|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 January, 2012

அனில் கும்ளே மீது மோசடி வழக்கு...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ளே மீது, மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக்கோரி, அவரது மனைவியின் முன்னாள் கணவர், ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.அனில் கும்ப்ளே மனைவி சேத்னா.இவரது முதல் கணவர் ஜாகிர்தார். சேத்னா-ஜாகிர்தாருக்கு பிறந்த மகள் ஆருன்னி,12, தற்போது அனில் கும்ளே, தாய் சேத்னாவுடன் ஆருன்னி வசித்து வருகிறார்.

இந்நிலையில், சேத்னா மகள் ஆருன்னிக்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கு, தந்தையின் பெயர் ஜாகிர்தார் என்று அனில் கும்ளே குறிப்பிட்டுள்ளார். அத்துடன் விண்ணப்பத்தில் அனில் கும்ளேயே கையெழுத்திட்டுள்ளார். இந்த விவகாரத்தில், என் பெயரை பயன்படுத்தி, அனில் கும்ளே மோசடி செய்துள்ளார். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சேத்னாவின் முன்னாள் கணவர் ஜாகிர்தார், பெங்களூரு பாரதி நகர் போலீஸ் நிலையத்தில் கடந்த வாரம் புகார் செய்திருந்தார். ஒரு வாரமாகியும் போலீசார், புகாரை பதிவு செய்யாததால், நேற்று கர்நாடக ஐகோர்ட்டில், "என் புகாரை போலீசார் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்று ஜாகிர்தார் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்றுக் கொண்ட கோர்ட், இன்றைக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...