|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 January, 2012

உங்கள் மனைவி கீதாவை எப்போது நீங்கள் கொல்லப்போகிறீர்கள்?


கோவை அத்தப்பகவுண்டன்புதூரை சேர்ந்தவர் கவுதமன் (26). இரும்பு வியாபாரி. இவருடைய மனைவி கீதா (25). இவர் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில்,
’’நானும், கவுதமனும் காதலித்தோம். இருவீட்டாருக்கும் இது தெரியவந்ததும், பெற்றோர் பேசி முடித்து 21.9.09 அன்று எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது என்னுடைய பெற்றோர் நகையை வரதட்சணையாகஅணிவித்தனர். கவுதமனுக்கும் பிரஸ்லெட் நகை போடப்பட்டது. திருமணத்துக்கு பிறகு கவுதமன் என்னுடன் நெருங்கி பழகுவதை குறைத்தார். அவருக்கு பீளமேடு பகுதியை சேர்ந்த கல்லூரி பேராசிரியை உமா மகேஸ்வரி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி கவுதமனிடம் கேட்டபோது `எனக்கு தொழில் செய்ய பணம் தேவைப்படுகிறது. அவள் எனக்கு எல்லாம் தருகிறாள். நான் அவளை விட வேண்டும் என்றால் உன் தாயிடம் போய் ரூ.5 லட்சம் வாங்கி வா' என்று மிரட்டினார்.இதனால் ஓரளவு நகை, பணம் வழங்கப்பட்டது. அதன்பிறகும் அந்த பெண்ணுடன் உள்ள கள்ளத்தொடர்பு நீடித்தது.

இதுபற்றி எனது மாமனார், மாமியாரிடம் கேட்டேன். அவர்களும் என்னை மிரட்டத் தொடங்கினார்கள். ஒழுங்காக என்னுடைய மகன் சொன்ன மாதிரி ரூ.5 லட்சம் பணம் வாங்கி வா. இல்லையென்றால் அந்த பெண்ணுடன்தான் அவன் வாழ்வான் என்று கூறினார்கள். என்னுடைய கணவர் கவுதமன், கள்ளக்காதலி உமாமகேஸ்வரியுடன் சேர்ந்து என்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதும் ரகசிய கடிதம் மூலம் தெரியவந்தது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறியுள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கல்லூரி பேராசிரியையுடன், இரும்பு வியாபாரி கவுதமன் கள்ளக்காதல் வைத்துக் கொண்டு, மனைவியை கொலை செய்ய முயன்றதும், தாய், தந்தையுடன் சேர்ந்து கொண்டுவரதட்சணை கேட்டு கொடுமை செய்ததும் தெரியவந்தது.

உமாமகேஸ்வரி, பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார். சில நாட்களாக பணிக்கு செல்லாமல் கவுதமனுடன் உல்லாசமாக சுற்றித் திரிந்தார். கவுதமனுக்கு உமா மகேஸ்வரி எழுதிய ரகசிய கடிதமும் போலீசிடம் சிக்கியது. கவுதமனையும், உமாமகேஸ்வரியையும் போலீசார் விசாரணை நடத்தி 2 பேரையும் கைது செய்தனர். கவுதமனின் தாய் சரோஜா, தந்தை பாலசுந்தரம் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உமா மகேஷ்வரி எழுதிய 6 பக்க கடிதத்தில்,   ‘’ குண்டு இட்லியே என்று என்னை நீங்கள் வர்ணிப்பீர்கள்.  உங்கள் மனைவி கீதாவை எப்போது நீங்கள் கொல்லப்போகிறீர்கள். என்னுடன் எப்போது நீங்கள் நிரந்தரமாக வாழப்போகிறீர்கள்.  என்னுடன் மட்டும்தான் நீங்கள் படுக்கையை பகிர்ந்துகொள்ளவேண்டும். ப்ளீஸ், நீங்கள் மனைவியை கொல்லபோவதாக சொன்னதை சீக்கிரமா செய்யுங்க.  நாம சந்தோசமா இருக்கலாம்.  இப்படிக்கு உங்கள் குண்டு இட்லி’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...