|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 January, 2012

ஆரத்தி தட்டில் காணிக்கை வசூலிக்க கோர்ட்டு தடை...

அந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளகஸ்தியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராகு, கேது பூஜை மற்றும் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீகாளகஸ்தியை சேர்ந்த வேணுகோபால் நாயுடு, பிரசாத் பாபு ஆகிய 2 பேரும் சாமி தரிசனம் செய்ய சிவன் கோவிலுக்கு சென்றனர். அவர்கள் கோவிலுக்குள் சென்று, ராகு, கேது பூஜை மற்றும் சாமி தரிசனம் செய்தனர். அப்போது அர்ச்சகர்கள் ஆரத்தி தட்டை காண்பித்து காணிக்கை போடுமாறு இவர்களிடமும் மற்ற பக்தர்களிடமும் கேட்டனர். இவ்வாறு காணிக்கை வசூலிப்பதை எதிர்த்து, வேணுகோபால் நாயுடு, பிரசாத்பாபு ஆகியோர் ஸ்ரீகாளகஸ்தி குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை மாஜிஸ்திரேட்டு சுப்பாரெட்டி விசாரித்து வந்தார். இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் நடந்தது. அப்போது, ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோவிலில் அர்ச்சகர்கள், ஆரத்தி தட்டை காண்பித்து பக்தர்களிடம் காணிக்கை வசூலிக்க இடைக்கால தடை விதித்தும், மேலும் இதுதொடர்பான உத்தரவை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கவும் மாஜிஸ்திரேட்டு சுப்பாரெட்டி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...