|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 January, 2012

இறந்த பி்ச்சைக்கார மூதாட்டியின் வங்கிக் கணக்கில் ரூ.7 லட்சம்


நெல்லை சந்திப்பில் இறந்து கிடந்த பிச்சைக்கார மூதாட்டியின் வங்கிக் கணக்கில் ரூ.7 லட்சம் இருப்பதாக வெளியான தகவல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை சந்திப்பு பஸ் நிலைய 2வது பிளாட்பாரத்தில் 65 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். சந்திப்பு இன்ஸ்பெக்டர்கள் கோமதி, ரேனியல் ஜேசுபாதம் ஆகியோர் அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூதாட்டியின் பையில் 4 பிளாஸ்டிக் டப்பாக்களும், கொஞ்சம் சில்லரைகளுமே இருந்த நிலையில் அவரது பெயர் யாருக்குமே தெரியவில்லை. ஆனால் போலீஸ் விசாரணையில் பகீர் தகவல் வெளியாகின. இறந்த மூதாட்டியின் சொந்த ஊர் கல்லிடைக்குற்ச்சி. அங்குள்ள அஹ்ரகார தெருவில் இருந்து வெளியேறிய அவர் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் சில மாதங்களாகவே பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்தி வந்தார். அவர் பிச்சயெடுத்த பணத்தை தேசியமாக்கப்பட்ட வங்கியில் வைத்திருந்தார். அவரது வங்கிக் கணக்கில் சுமார் ரூ.7 லட்சம் வரை உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...