|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 January, 2012

வாக்களிப்பதை கட்டாயமாக்க அத்வானி வலியுறுத்தல்.

தேர்தல் சீரமைப்பு தொடர்பாக தற்போது விவாதம் நடந்துவரும் நிலையில் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி வலியுறுத்தியுள்ளார். இதை நிறைவேற்றுவது ஒன்றும் முடியாத காரியம் அல்ல என்று அவர் கூறினார். இந்தியாவில் உள்ள அனைத்து குடிமகன்களையும் வாக்காளர்களாக தேர்தல் ஆணையம் பதிவுசெய்யும் திட்டத்துக்கு அவர் ஆதரவு தெரிவித்தார். அதே சமயம், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும் என்றார் அவர். கல்வி என்பது இப்போது அடிப்படை உரிமையாகியுள்ள நிலையில், வாக்களிப்பதை குடிமக்களின் அடிப்படை பொறுப்பாக்க வேண்டும் என அத்வானி கூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...