|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 March, 2012

இந்திய அரசியலில் மகளிர் உலக பட்டியலில் இந்தியாவுக்கு 105வது இடம்!

அரசியலில் பங்கேற்கும் மகளிர் அதிகம் கொண்ட நாடுகள் எது என்ற பட்டியலில் உலக அளவில் ஜனநாயக நாடு என்ற பட்டத்துடன் இருக்கும் இந்தியாவுக்கு 105 வது இடம் தான் கிடைத்திருக்கிறது. அண்டைய நாடான பாகிஸ்தான், வங்க தேசம், நேபாள் நாட்டை விட நாம் குறைவான மதிப்பைத்தான் மகளிருக்கு அளித்து வந்துள்ளோம். 

உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில் பார்லி., யூனியன் தொடர்பான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 543 லோக்சபா உறுப்பினர்கள் கொண்ட இந்தியாவில் 60 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். 240 ராஜ்யசபா உறுப்பினர்களில் 24 பேர் தான் பெண்கள். இதில் 2 சீட் லோக்சபாவில் காலியாகவும், ராஜ்யசபாவில் 5 சீட்டும் காலியாக உள்ளது. மேலும் இந்த பட்டியலின் விவரம் வருமாறு: ரூவாண்டா தான் டாப் மோஸ்ட் முக்கியத்துவம் அளிக்கும் நாடாக உள்ளது. இந்நாட்டின் கீழ்சபையில் 56 சதவீத பெண்களும், மேல்சபையில் 38 சதவீதத்தினரும் அடங்குவர். இதற்கு அடுத்தப்படியாக தென்மேற்கு ஐரோப்பாவில் உள்ள அந்தோரா ( 50 சதம் ) கொண்டு 2 வது இடத்தில் உள்ளது. தான்சானியா ( 36 சதம் ) உலக அரங்கில் 18 வது இடம். இதே போல் ஸ்பெயினும் உள்ளது. உகாண்டா ( 35 சதம் ) 19 வது இடம், டூனிஷியா , தெற்கு சூடான் ( 26 சதம் ) 35 வது இடம், இலங்கை ( 129) , மியான்மர் (134 வது இடம்).
பணக்கார நாடுகள் எப்படி? உலகில் பணக்கார மற்றும் சக்தி கொண்ட நாடுகளான அமெரிக்கா (78 வது இடம்), பிரிட்டன் (53வது இடம்) , இத்தாலி (57 வது இடம்), பிரான்ஸ்( 69 வது இடம்) , ஜெர்மனி ( 21 வது இடம்), சீனா ( 60 வது இடம்). சவுதி அரேபியா, கத்தார், பெலீஸ், பாலுவ், மிக்ரோனேஷியா, நவ்ரு, சாலமோன் தீவுகள் நாடுகளில் பெண்கள் பங்கேற்பு பூஜ்யமாக உள்ளது.
மகளிர் தினம் கொண்டாடும் இந்நாளில் சென்னையில் பேசிய மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில் 33 சதம் வழங்கும் மகளிர் மசோதா இன்னும் நிறைவேற்ற முடியாமல் சிரமப்படுகிறோம் என்று வேதனை பட்டார். நமது நாட்டில் மகளிர் மசோதா நிறைவேறுமா என்ற நிலையில் தான் இன்னும் இருக்கின்றோம். என்பதும் ஒரு வேதனையாக தகவல்தான். காரணம் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு நிலையை கருத்தில் கொண்டு வருகிறது. இந்தியாவில் உள்ள பெண் தலைவர்களாவது பெண்கள் முன்னேற்றத்திற்கு முழு முயற்சி எடுப்பார்களா? 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...