|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 March, 2012

தமிழகம் முழுவதும் கிராமப்புற வளர் இளம் பெண்களின் சுகாதாரத்தை காக்க இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் ரூ.42 கோடியில் !


தமிழகம் முழுவதும் கிராமப்புற வளர் இளம் பெண்களின் சுகாதாரத்தை காக்க இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் ரூ.42 கோடியில் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் 10 முதல் 19 வயதுள்ள வளர் இளம் பெண்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதற்கிடையில், பிரசவிக்கும் தாய்மார்கள் 7 லட்சம் மற்றும் 700 பெண் சிறை கைதிகளுக்கும் சேர்த்து கிராமப்புற பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. 

அதன்படி, சுமார் 40 லட்சம் பேருக்கு சானிட்டரி நாப்கின் வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின்படி, 2 மாதத்துக்கு ஒரு முறை 3 பாக்கெட் அடங்கிய 18 நாப்கின்கள் வழங்கப்படும். மேலும், நலவாழ்வு புத்தகம் ஒன்று தனியாக அளிக்கப் படும். அதில், வளர் இளம்பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் இடம்பெற்றிருக்கும். நாப்கின்கள் வழங்கும் தேதியும் குறிக்கப்படும். ‘புது யுகம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் மாணவிகளுக்கு அந்தந்த பள்ளியில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும். அதேபோல் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு மருத்துவமனை மற்றும் சிறை அதிகாரிகள் மூலம் மற்றவர் களுக்கு நாப்கின் வழங்கப்படும். ‘புது யுகம்’ திட்டத்தை மார்ச் 26க்குள் முதல்வர் தொடங்கி வைப்பார் என்று சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...