|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 March, 2012

பூமிக்கு அருகில் செவ்வாய்.

பூமிக்கு அருகில் வரும் செவ்வாய் கிரகத்தை, பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம் என, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயலர் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறினார். அவர் கூறியதாவது : சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் செவ்வாய் கிரகம், வரும் 3ம் தேதி நள்ளிரவு, 1.40 மணிக்கு, பூமிக்கு, 10.08 கோடி கி.மீ., தொலைவில் வருகிறது. இத்தொலைவு, 5.5 கோடி கி.மீ.,க்கும், 38 கோடி கி.மீ.,க்கும் இடையே வேறுபடும். 26 மாதங்களுக்கு ஒரு முறை வரும் இந்த நிகழ்வின் போது, இரவு நேரத்தில், வானத்தின் கிழக்கு திசையில், சிவப்பு நிறத்தில், செவ்வாய் கிரகம் தெரியும். இதை பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம். நாளை முதல், 4ம் தேதி வரை, இரவு 7 மணி முதல், 9 மணி வரை, இந்த நிகழ்வை பொதுமக்கள் தொலை நோக்கியில் காண, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கம், சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்கு முன், 2003 ஆக., 27ம் தேதி, செவ்வாய் கிரகம், பூமிக்கு, 5.5 கோடி கி.மீ., தொலைவிலும், 2010 ஜன., 29ம் தேதி, 9.95 கோடி கி.மீ., தொலைவிலும் வந்தது. இவ்வாறு அய்யம்பெருமாள் கூறினார்.  ஆன்மீகத்தில் செவ்வாய்: பெருமாளின் மனைவியான பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் செவ்வாய். எனவே, செவ்வாயை பூமியின் மகனாக கூறுவார்கள்.   பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவனும், மின்னலைப் போன்ற ஒளி கொண்டவனும், குமரனும், சக்தி ஆயுதம் தாங்கியவனும், பெருமை மிக்க மங்கலனுமாகிய செவ்வாயைப் போற்றுகிறேன் என்று பெரியவர்கள் போற்றி வழிபடுகின்றனர்.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் அங்காரகன் ஆச்ரயாமி என்று செவ்வாயைப் போற்றுகிறார். நலத்தைத் தருபவனே! பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! எளியவர்களைக் காப்பவனே! என்றும் பாடுகிறார்.  தற்போது பூமிக்கு அருகில் வந்திருக்க கூடிய செவ்வாயை மார்ச் 2 முதல் 4ம் தேதி வரை இரவு 7 முதல் 9 மணிவரை வானத்தில் வெறும் கண்ணால் நாம்  பார்க்கலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், சொந்தவீடு அமையவும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரவும் இந்த நாட்களில் செவ்வாயை வழிபாடு செய்வது சிறந்தது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...