|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 March, 2012

பூண்டி கோவிலில் தேர்த்திருவிழா!

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா  கொடியேற்றத்துடன் துவங்கியது. கொங்கு ஏழு சிவாலயங்களில் ஒன்றானதும், சுந்தரமூர்த்தி நாயனரால், தேவராம் பாடப்பெற்றதுமான திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் தேர்த் திருவிழா இன்று காலை 7.00 மணிக்கு ரோஹிணி நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இரவு சுவாமி வீதியுலா காட்சி நடக்கிறது. நாளை இரவு சூரிய சந்திர மண்டல காட்சியும், 3ம் தேதி பூத, சிம்ம வாகன காட்சியும், 4ம் தேதி புஷ்ப விமான காட்சியும் நடக்கின்றன. வரும் 5ம் தேதி பஞ்சமூர்த்திகளுடன், ரிஷப வாகனத்தில் திருமுருகநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 6ம் தேதி திருக்கல்யாண உற்சவம், யானை, அன்ன வாகன காட்சி நடக்கிறது. வரும் 7ம் தேதி மக நட்சத்திரத்தில் விநாயகப் பெருமான், திருமுருகநாத சுவாமி, ஸ்ரீசண்முகநாதர் உட்பட மூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அன்றைய தினம் இரவு 9.00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.  8ம் தேதி மீண்டும் தேரோட்டம், 9ம் தேதி பரிவேட்டை, குதிரை, சிம்ம வாகன காட்சி நடக்கிறது. வரும் 10ம் தேதி இரவு 7.00 மணிக்கு கூப்பிடு விநாயகர் கோவிலில், பூண்டி கோவில் தல வரலாற்றில் இடம் பெற்ற ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழா நடக்கிறது. வரும் 11ல் பிரம்மதாண்டவ தரிசன காட்சி, 12ம் தேதி மஞ்சள் நீர் விழா, இரவு மயில் வாகன காட்சியுடன் திருவிழா நிறைவடைகிறது. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் தினமும் இரவு 7.00 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெற உள் ளது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...