|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 March, 2012

முட்புதரில் தொப்புள் கொடியுடன்... பெண் குழந்தை... நாய்கள் கடித்துக் குதறி...!!!

முட்புதரில் கிடந்த பிறந்து சில மணி நேரமே ஆன தொப்புள் கொடி கூட அறுக்கப்டாத பெண் குழந்தையை தெரு நாய்கள் கடித்துக் குதறியதால் அது பரிதாபமாக இறந்தது. கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம் அப்பாஜி கார்டன் பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் யாரோ பிறந்து சில மணி நேரமேயான தொப்புள் கொடி கூட அறுக்கபடாத பெண் குழந்தையை போட்டுச் சென்றுள்ளனர். அதைப் பார்த்த தெரு நாய்கள் குழந்தையை கடித்துக் குதறின. அப்போது ஏராளமான நாய்கள் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் முட்புதருக்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் நாய்களை விரட்டியடித்துவிட்டு குற்றுயிரும், குலை உயிருமாய் கிடந்த குழந்தையை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அது வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.அந்த பகுதியைச் சேர்ந்த யாராவது தான் குழந்தையை முட்புதரில் வீசியிருக்க வேண்டும் என்றும், அது தவறான வழியில் பிறந்ததால் வீசப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து அப்பகுதியில் இருக்கும் கர்ப்பிணிகளில் யாராவது குழந்தை பெற்றுள்ளார்களா என்று மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...