|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 May, 2012

தலை, கால்கள் துண்டிக்கப்பட்டு 49 பேர்!


மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சான் ஜுயன் என்ற இடத்தில் பிளாஸ்டிக் மூட்டைகளில் கட்டப்பட்டு 49 பேரின் உடல்கள் கிடந்தன. இதில் 43 ஆண்கள், 6 பெண்கள் உடல்களாகும். பலரது தலைகள், கை-கால்கள் வெட்டி துண்டிக்கப்பட்டு இருந்தன. எனவே இந்த 49 பேரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, பின்னர் உடல்களை மூட்டையில் கட்டி கொண்டு வந்து வீசப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.இந்த கொடூர செயலை போதைப்பொருள் கடத்தல் கும்பல் செய்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. தலைகள், கை-கால்கள் வெட்டப்பட்டு உடல்கள் உருக்குலைந்து இருப்பதால் இவர்கள் யார்? என்பதை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் போலீசார் கூறுகிறார்கள். இந்த பிணங்கள் கிடந்த இடம் அமெரிக்க எல்லையை ஒட்டிய பகுதியாகும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...