|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 May, 2012

அனுபவிக்க மாணவனை கடத்திய பெண்!


குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த முதலார் ஓடவிளை பகுதியை சேர்ந்தவர் ரவி (29). கொத்தனார். இவரது மனைவி விஜி (27). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். ரவியின் பக்கத்து வீட்டில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இவன் கட்டிட வேலைக்கு செல்வது வழக்கம்.இந்த நிலையில் ரவி இல்லாத நேரத்தில் சிறுவன் விஜியின் வீட்டுக்கு வந்து, அவரது பிள்ளைகளுடன் விளையாடுவான். அப்போது விஜிக்கும், சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி சிறுவனை அழைத்து வந்து விஜி உல்லாசமாக இருந்துள்ளார். இதனை அறிந்த ரவி மனைவியை கண்டித்தார். இந்நிலையில் விஜி நேற்று முன்தினம் இரவு கணவன் மற்றும் குழந்தைகள் தூங்கிய பின் வீட்டிலிருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ. 5 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். அதே நேரத்தில் அவருடன் உல்லாசமாக இருந்த சிறுவனையும் காண வில்லை. 

இது குறித்து ரவி நேற்று மாலை திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.இந்த நிலையில் சிறுவன் தந்தை , திருவட்டார் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில்,’’எனது மகனை விஜி, ஆசை வார்த்தைகள் கூறி அடிக்கடி வீட்டுக்குள் அழைத்து உள்ளார். முதலில் நாங்கள் இதை பெரிதாக கண்டு கொள்ள வில்லை. பின்னர் தான் விஜி, எனது மகனிடம் தவறாக நடக்கிறார் என்பது தெரிந்து நாங்கள் கண்டித்தோம். எனது மகன் 10ம் வகுப்பு முடித்து விட்டு ஒரு வருடம் வீட்டில் இருந்தான். இந்த வருடம் அவனை 11ம் வகுப்பில் சேர்க்க திட்டமிட்டு இருந்தோம். இந்த நேரத்தில் நேற்று முன் தினம் விஜி, எனது மகனை அழைத்து நாம் இங்கு இருந்தால் நம்மை பிரித்து விடுவார்கள். ஊரை விட்டு ஓடி விடுவோம் என கூறி எனது மகனை அழைத்து சென்று விட்டார். மேலும் எனது வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் பணம், மூன்றரை பவுன் நகை, பைக் ஆகியவற்றையும் எடுத்து சென்று உள்ளனர். அவனது நண்பர்களிடம் விசாரித்த போது எனது மகனை பலவந்தப்படுத்தி விஜி, கடத்தி சென்றது தெரிய வந்தது. இதற்கு விஜியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று  கூறி உள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...