|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 May, 2012

காளியின் பெயரில் பீர் விற்பனை.

இந்து கடவுளான காளியின் பெயரில் அமெரிக்காவில் ஒரு நிறுவனம் பீர் விற்பனை செய்துவருவதையடுத்து அதுகுறித்து அமெரிக்க தூதரை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.ஓரேகான் மாகாணத்தைச் சேர்ந்த பர்ன்சைட் பிரீவிங் நிறுவனம் அந்த பீரை விற்பனை செய்து வருகிறது. அந்த பீரின் பாட்டில்களில் காளியின் படமும் அச்சிடப்பட்டுள்ளன.இது இந்துக்களின் மத உணர்வுகளை வேதனைப்படுத்துவதாக பாஜக எம்பி ரவி சங்கர் பிரசாத் கூறினார்.மற்ற மதத்தினரின் கடவுளை இதுபோலக் காட்ட முடியுமா என அவர் ஜீரோ நேரத்தின்போது கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அமெரிக்க தூதரை அழைத்து விசாரிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணைஅமைச்சர் ராஜிவ் சுக்லா, இந்த விவகாரத்தை வெளியுறவுத் துறையிடம் கொண்டுசெல்கிறேன் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...