|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 May, 2012

மனித உரிமை மீறலாகவே?


கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு சர்வதேச மன்னிப்பு சபை ஆதரவு தெரிவித்துள்ளது.இது குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசும் இந்திய அரசும் தொடர்ந்து அணு உலை போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கின்னஸ் சாதனையாக 5,000 பேர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளது. கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமார் உள்ளிட்டோர் மீது பிரிவினைவாத வழக்குகளும், பல்வேறு வழக்குகளும் போட்டு அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

உதயகுமாரின் மீது போடப்பட்ட பொய் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமாயின் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை வாசம் கிடைக்கக்கூடும். இயற்கையை பாதுகாக்க பாடுபாடும் உதயகுமார் போன்றோருக்கு இந்திய அரசு கொடுக்கும் பரிசு இது. மேலும் இடிந்தகரையை சுற்றிலும் 144 தடை உத்தரவு போட்டு ஊருக்குள் யாரும் போகவோ வெளியே வரவோ முடியாதபடி செய்துள்ளது அரசுஇதை சர்வதேச மன்னிப்பு சபை மனித உரிமை மீறலாகவே கருதுகிறது. அதனால் உலகில் உள்ள அனைவரையும் இந்திய அரசுக்கு தகவல் அனுப்புமாறு சர்வதேச மனிப்பு சபை கேட்டுக்கொள்கிறது. உலகில் உள்ள யாவரும் இந்த கோரிக்கையை இந்திய அரசுக்கு எழுதலாம்.

1. அமைதியாக போராட்டம் நடத்தி வரும் போராளிகளின் மேல் போடப்பட்ட பொய்யான வழக்குகளை திரும்பப் பெறு.

2. சட்ட விரோதமாக கைது செய்யப்பட்ட சதீஷ் மற்றும் முகிலனை விடுதலை செய்.

3. 144 தடை உத்தரவை உடனே நீக்கு. ஊர் மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதி. 

4. சர்வதேச, இந்திய சட்டத்திற்கு உட்பட்டு நடத்தப்படும் அமைதி வழிப் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கு. அவர்களின் கருத்துரிமைக்கு மதிப்பளி.இந்த கோரிக்கைகளை வரும் ஜூன் மாதம் 22ம் தேதிக்குள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...