|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 November, 2011

டிசம்பரில் மதுபானங்கள் விலையை உயர்த்த அரசு முடிவு!


 தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் முதல் எலைட் மதுபானங்கள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தவும் அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்றோடு 8 ஆண்டு நிறைவடைந்துள்ளது. இன்றைய தேதிக்கு படு லாபகரமாக இயங்கி வரும் அரசு அமைப்பு எது என்றால் அது டாஸ்மாக்தான். பல லட்சம் பேரை தள்ளாட வைத்தாலும், தள்ளாட்டமே இல்லாமல், 9வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள டாஸ்மாக் நிறுவனம் டிசம்பர் மாதம் முதல் எலைட் ஷாப்கள் திறப்பதுடன் மதுபானங்கள் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னையில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சவுண்டையா தலைமையில் மண்டல மேலாளர்கள், அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

அதில் டாஸ்மாக் கடைகள் மூலம் இன்னும் கூடுதல் வருவாயை எட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி மதுபானங்கள் விலை உயர்த்துவது குறித்தும், கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை கண்காணித்து தடுப்பது குறித்தும் மண்டல, மாவட்ட அதிகாரிகளுடன் யோசனை கேட்கப்பட்டது. அனைத்து அதிகாரிகளும் மதுபானங்கள் விலையை உயர்த்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.  தமிழகத்தில் 2003ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி வரை தனியார் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றது. நவ 29ம் தேதி முதல் தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பஞ்சாயத்து கிராமப்பகுதிகளில் 6 ஆயிரத்து 500 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. 2003ம் ஆண்டு வரை ரூ.2 ஆயிரம் கோடி அளவில் ஆண்டு வருவாய் கிடைத்த வந்த நிலையில் 2010-2011ம் ஆண்டில் ரூ.15 ஆயிரம் கோடி அளவில் தமிழக அரசிற்கு மதுபானங்களின் கலால் வரி, விற்பனை வரி உள்ளிட்டவைகள் மூலம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...