|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 November, 2011

தட்டாம்பூச்சிகளின் அளவில் உளவு விமானம்!
எதிரிகளை கண்காணிக்கவும், உளவு பார்க்கவும் பறவைகள், தட்டாம்பூச்சிகளின் அளவில் உளவு விமானம் தயாரிக்கப்படவிருப்பதாக இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன முதன்மை கட்டுப்பட்டாளர் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய சிவதாணுப்பிள்ளை வருங்கால மக்களின் வாழ்க்கையில் நானோ டெக்னாலஜி பெரும் பங்கு வகிக்கும். நானோ டெக்னாலஜி மூலம் உணவு பதப்படுத்துதல், எரிசக்தி உற்பத்தி, பாதுகாப்பான குடிநீர் உள்ளி்ட்ட துறைகளில் மக்கள் பயன் பெற முடியும். ஒளியை விட 7 மடங்கு வேகமாக சென்று தாக்கக் கூடிய பிரமாஸ் ஏவுகணையின் வேகத்தை மேலும் அதிகரிக்க ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றது. உயர்வேதியியல் முறையில் தயாரிக்கப்படும் தளவாடங்கள் ஏவப்பட்டால் அவை மனித உடலில் படும் போது அவர்களுக்கு கதிர்வீச்சு ஏற்படும். அந்த கதிர்வீச்சு பாதிப்பை குறைக்க பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக குளுக்கோஸ் கொடுக்க வேண்டும்.

இந்திய எல்லைப் பகுதிகளில் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு ரத்த அழுத்தம், இ.சி.ஜி. ஆகியவற்றை அளக்கும் கருவிகள் பொருத்தப்பட்ட சீருடை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ராணுவ வீரர்களின் உடல்நிலையை ராணுவ அதிகாரிகள் முகாமில் இருந்தவாறே தெரிந்து கொள்ள முடியும். ராணுவ வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது உடனடி சிகிச்சை அளிக்கவும் இந்த சீருடை பயன்படும். நானோ டெக்னாலஜியின் மூலம் தட்டாம்பூச்சி, பறவைகளின் அளவில் உளவு விமானங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் மூலம் வெளிநாட்டு எதிரிகளின் ஊடுருவல், நடமாட்டம் ஆகியவற்றை கண்காணிக்க முடியும். இந்த விமானங்களில் 5 ஆண்டுகளில் தயாரிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...