|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 November, 2011

அரசு மருத்துவமனையில் நர்ஸ் போல் நடித்து குழந்தை கடத்தல் பெண் கைது!


குழந்தை இல்லாத ஏக்கத்தில், ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மருத்துவமனையில், நர்சு போல் நடித்து, ஆண் குழந்தையை கடத்தி சென்ற பெண்னை, மருத்துவமனை ஊழியர்கள், மடக்கி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆரணி ரங்கன் தெருவைச் சேர்ந்தவர், ராஜசேகர், கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜனனி, 23. ராயப்புரம் ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி ஆண் குழந்தை பெற்றார். வார்டில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மதியம் 12 மணிக்கு, ஒரு பெண், நர்சு வேடம் போட்டு, வார்டுக்கு சென்றார். தடுப்புசி போட வேண்டும் எனக் கூறி, குழந்தையை தூக்கிச் சென்றார். குழந்தையை தூக்கி கொண்டு, மருத்துவமனை விட்டு வெளியே வந்தார். அப்போது, வாசலில் நின்ற காவலாளி, "டிஸ்சார்ஜ்'க்கான ஆவணங்களை கேட்டுள்ளார். பெண் திரு திருவென முழிப்பதை பார்த்து, அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில், ராயபுரம் சூரிய நாராயண தெருவைச் சேர்ந்த கந்தவேலு மனைவி அனுசுயா, 25 என்பதும், திருமணமாகி மூன்று ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் அவதிப்பட்டதால், இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...