|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 November, 2011

முகவரி மாற்றம் இனி முன் அனுமதி தேவையில்லை...


பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்கு, முன் அனுமதியின்றி நேரில் விண்ணப்பிக்கலாம்,'' என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், கூடுதல் பக்கங்கள் சேர்ப்பு போன்ற பணிகள், ஒருவரின் பாஸ்போர்ட்டிலேயே செய்யப்பட்டு வந்தன. தற்போது, தனியார் பங்களிப்புடன் கூடிய புதிய பாஸ்போர்ட் வழங்கும் முறையில், இம்மாற்றங்களை செய்ய விரும்புவோர், புதிதாக பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இவ்விண்ணப்பங்களை சமர்பிக்க, நீண்ட காத்திருப்பிற்கு பின் தான், ஆன் - லைனில் அனுமதி கிடைத்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, இப்பணிகளுக்கான விண்ணப்பங்களை, முன் அனுமதி பெறாமல், தாம்பரம் பாஸ்போர்ட் உதவி மையத்தில் நேரில் சமர்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. aவிண்ணப்பத்தை, http://www.passportindia.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம். விண்ணப்பதாரர்கள், ஆன் - லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், விண்ணப்ப குறிப்பு எண்(ஏ.ஆர்.என்.,) மற்றும் தேவையான அசல் சான்றிதழ்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். தாம்பரம் பாஸ்போர்ட் உதவி மையத்தில், வேலை நாட்களில் காலை 10 முதல், 1 மணி வரை, இவ்வசதியை பெறலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...