|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 November, 2011

ராணுவ கெடுபிடிகளை மீறி பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாடிய யாழ். மாணவர்கள்!


தமிழீழ தேசிய மாவீரர் நாள், மற்றும் பிரகபாகரன் பிறந்தநாள் நிகழ்வுகளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொண்டாடக்கூடும் என்பதால், அதைத் தடுக்க ராணுவத்தினர் சுற்றிவளைத்தனர். ஆனாலும் இந்த நெருக்கடியையும் மீறி யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் பிரபாகரன் பிறந்தநாளை பட்டாசு வெடித்துக் கொண்டி ராணுவத்தை அதிரவைத்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்பே மாவீரர்களை நினைவேந்தியும், பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தும் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து இலங்கை காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும், வெளியே ராணுவத்தினரும் படைப் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு, மாணவர்களை அச்சுறுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டனர். நேற்று பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்துக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்த்த ராணுவத்தினர் பல்கலைக்கழக வளாகத்தையே சுற்றிச் சுற்றி வந்தனர்.

ஆனாலும் இவர்கள் அனைவரது கண்களிலும் மண்ணைத் தூவும் விதத்திலும் சிங்களத்தை தலைகுனிய வைக்கும் வகையிலும் யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் நேற்றிரவு பட்டாசு கொளுத்தி பிரபாகரன் பிறந்தநாளைக் கொண்டாடினர். பட்டாசு சத்தத்தைக் கேட்ட செய்தியாளர்கள் பல்கலைக் கழகத்தைச் சுற்றி நின்ற படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக எண்ணி அச்சமடைந்தனர். ஆனால் நேரில் சென்ற பின்னரே உண்மை நிலையை அறிந்து திரும்பினர்.

இன்றைக்கு தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு பல்கலை வளாகத்தில் மாணவர்கள் எழுச்சி நிகழ்வுகளை மேற்கொள்வர் என்ற எதிர்பார்ப்பில் சிங்கள ராணுவத்தினரும் உளவுப் பிரிவினரும் பல்கலைக்கழகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆயுத அடக்குமுறைகளால் தமது உணர்வுகளை அடக்கிவிட முடியாது என்றும், இவை தமது விடுதலை வேட்கையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழர் எமது மதம், தமிழீழம் எமது ஆலயம், தலைவர் பிரபாகரன் எமது கடவுள் என்று பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...