|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 December, 2011

எப்எச்எம் இதழுக்கு ரூ. 10 கோடி கேட்டு வீணா மாலிக் நோட்டீஸ்


தன்னுடைய ஆபாசப் படத்தை வெளியிட்டு தனது புகழுக்கு களங்கம் கற்பித்ததற்காக ரூ. 10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி எப்எச்எம் இந்தியா இதழுக்கு பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எப்எச்எம் இந்தியா இதழின் அட்டைப் படத்தில் வீணா மாலிக்கின் முழு நீள நிர்வாணப் படம் இடம் பெற்றிருந்தது. இடதுபுற தோள்பட்டையில் ஐஎஸ்ஐ என்ற பச்சை பெரிதாக தெரியும் வகையிலும், தனது இரு கைகளாலும், முன்னழகை மறைத்தபடியும் போஸ் கொடுத்திருந்தார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. ஆனால் நான் இப்படி ஒரு போஸே கொடுக்கவில்லை என்று வீணா விளக்கம் அளித்தார். ஆனால் எப்எச்எம் இதழ் அதை மறுத்தது. வீணாதான் இப்படி போஸ் கொடுத்தார். மேலும் ஐஎஸ்ஐ என்ற எழுத்து நன்கு பெரிதாக தெரிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த போஸுக்காக அவருக்கு பெரும் தொகையும் கொடுத்துள்ளோம் என்று அந்த நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எப்எச்எம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் வீணா. அதில், இந்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது. இதனால் எனது புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்பட்டு விட்டது. இந்த செயலானது இந்திய பீனல் கோட் சட்டத்தின்படியும், இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டப்படியும் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே இதற்காக ரூ. 10 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று வீணா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...