|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 December, 2011

மகராஷட்டிராவில் 42 லட்சம் போலி ரேசன் கார்டு மூலம் உணவுபொருளை கொள்ளையடித்து வெளிமார்க்கெட்டில் விற்ற விவரம் 25 ஆயிரம் கோடி வரை இழப்பு!


நாட்டில் பெரும் புயலை கிளப்பிய ஆதர்ஸ் குடியிருப்பு முறைகேடு விவகாரம் எழுந்த மகாராஷட்டிராவில் போலி ரேசன் கார்டுகள் மூலம் உணவுபொருளை கொள்ளையடித்து வெளிமார்க்கெட்டில் விற்ற விவரம் வெளிவந்திருக்கிறது. காங்கிரஸ் ஆளும் இம்மாநிலத்தில் ஏற்கனவே ஒரு முறைகேடு காரணமாக முதல்வர் பதவியை இழந்தவர் அசோகக்சவான். இவருக்கு பின்னர் புதிதாக கடந்த 2010 நவம்பர் மாதம் முதல்வராக பிரிதிவிராஜ்சவான் பொறுப்பேற்றார்.

தற்போது வெளியாகியிருக்கும் முறைகேடு விவரம் வருமாறு; போலி ரேசன் கார்டு மூலம் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மும்பை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளது. இந்த மனுவில் அன்னாஹசாரே குழுவை சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் சட்டப்படி இந்த துறையில் நடந்த விவரத்தையும் ஆதாரமாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

25 ஆயிரம் கோடி வரை இழப்பு: மனுதாரர் வக்கீல் ஆசீஸ்கைவாட் இந்த வழக்கு குறித்து கூறுகையில்: உணவுபொருள் பொது விநியோ திட்டத்தின்கீழ் தாசில்தார் அலுவலகம் முறையான ஆவணங்கள் பராமரிக்கவில்லை. பல ஆவணங்கள் போலியாக சித்திரிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் கவனமும், ஒப்புதலும் இல்லாமல் சுமார் 42 லட்சம் போலி ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதன் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட உணவு பொருள் கள்ள மார்க்கெட்டில் விற்கப்பட்டுள்ளது. சுமார் 25 ஆயிரம் கோடி வரை சுரண்டி அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர். நாங்கள் கேட்பதெல்லாம் போலி ரேசன் கார்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்பதுடன் , சம்பந்தப்பட்ட ரேசன்கடை மற்றும் தாசில்தார் அலுவலக ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இழந்த பொருட்கள் மற்றும் இதற்கான தொகையை மீட்க வேண்டும் .இவ்வாறு வக்கீல் கூறினார். 

இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. முறைகேட்டில் மாநில அரசு எடுத்த ஒழுங்கு நடவடிக்கைகள் என்ன என்ற விவரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி வழக்கை வரும் ஜனவரி 13 ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நாளில் வரும் விசாரணையின்போது மாநில அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கோர்ட் கருதினால் கடும் உத்தரவுகளை கோர்ட் பிறப்பிக்கும் இதன்பின்னர் கிரிமினல் வழக்கு மற்றும் கைது நடவடிக்கைகள் என சட்டப்படிகள் வேகமாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாநிலத்தில் கடந்த 1995 முதல் 2009 வரை இந்த முறைகேடு நடந்திருக்கிறது. இந்த காலங்களில் சிவசேன 2 முறையும், காங்கிரஸ் 6 முறையும் ஆளும் தகுதியில் இருந்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...