|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 December, 2011

சந்திரகிரகணம் அன்று நள்ளிரவில்தான் சாப்பிட வேண்டுமா?


சந்திர கிரகணம் நிகழும் வருகிற 10-ந்தேதி அன்று நள்ளிரவில் தான் சாப்பிட வேண்டுமா? என்பது குறித்து அர்ச்சகர்கள் விளக்கம் தெரிவித்து உள்ளனர். பெங்களூர் உள்பட இந்தியாவின் இதர பகுதிகளில் இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் வருகிற 10-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. அன்று மாலை 6.16 மணி முதல் இரவு 9.48 மணி வரை சந்திர கிரகணம் நிகழும். சம்பிரதாய முறைகளை கடைபிடிப்பவர்கள், சந்திர கிரகணத்துக்கு முன்பாக 6 மணியில் இருந்து 9 மணி வரை உணவு சாப்பிட மாட்டார்கள். சந்திர கிரகணம் நிகழும்போது உணவு சமைக்கவோ அல்லது முன்கூட்டியே உணவை சமைத்து வைக்கவோ மாட்டார்கள். 

சந்திர கிரகணம் முடிந்த பிறகு தான் உணவு சமைக்க தொடங்குவார்கள். அதன்பிறகு குளித்து, பூஜை முடிந்த பிறகே சாப்பிடுவார்கள். இதனால் சந்திர கிரகணம் அன்று சம்பிரதாயத்தை முறையாக கடைபிடிப்பவர்கள் நள்ளிரவில் தான் உணவு சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. மேலும் இறந்த மூதாதையர்களுக்கு `திதி' கொடுக்கவும் இரவு வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது. சந்திர கிரகணம், சூரிய கிரகணம் போன்றது அல்ல, எனவே சந்திர கிரகணத்தை எந்தவித சிறப்பு கண்ணாடியும் அணியாமல் வெறும் கண்களால் பார்க்கலாம்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...