|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 December, 2011

எனக்கு சிலோனே பிடிக்காது இதுல சிலோன் புரோட்டா வேனுமாம்! போராளி திரை விமர்சனம்.!

வழக்கம் போல் சமுத்திரகனி இயக்கத்தில் சசிக்குமார் நடித்திருக்கும் கலக்கல் படம் ரோட்டில் பைத்தியமாய்  திரியும் எத்தனையோ பேரை நாம் ஒவ்வொரு நாளும் கடந்து செல்கிறோம் நமது அவசர வேலை பளுவில்.  கொஞ்சம் உற்காந்து அதையே திரைப்படமாய் எடுத்து இருக்கும் சமுத்திரகனிக்கு பாராட்டுக்கள். ஊரில் லூசுத்தனமாய் சுற்றும் சசிக்கு அவ்வளவு முடி தேவைதானா? ஊரில் நட்பாய் கூடவே சுற்றும் சூரி பின்னி பெடலெடுத்து. நாங்கள்லாம் அப்பவே அப்படி இப்ப ? படம் முழுவதும் பஞ்சு!  

சில படங்கள் பார்க்கும் பொழுது இந்த கஞ்ச கருப்புக்கு கமொடிய வராதான்னு யோசிப்பது உண்டு ஆனால் இந்த படம் பார்க்கும் பொழுது அது ஒழுங்கா யூஸ் பண்ணுறவங்க கைலதான் இப்படம் மூலம் தெரியுது. படம் முழுவதும் நீண்ட நாள்களுக்கு பிறகு நல்ல கமோடி. சொத்துக்காக கொலை செய்ய துடிக்கும் குடும்பம் தப்பித்து ஓடி மனநல காப்பாகத்துக்குள் ஒளியும் சசி அங்கு ஏற்கனவே இருக்கும் அல்லுறு நரேஷ்சையும் கூடவே தப்பிக்க வைத்து சென்னை கூட்டி வருகிறார் (எனக்கு என்னமோ தமிழ்லையே இந்த கேரக்டருக்கு நிறைய பேர் இருக்க இவங்க ஏன் தெலுங்கு மலையாளம்னு அலையுறது தெரியல ?) பெட்ரோல் பங்கில் வேளைக்கு சேரும் இருவரும் அங்கு கஷ்ட படும் புதுமுகம்   நிவேதா தன் அக்காள் கணவனின் இம்சைக்கு ஆளாகும் பொழுது இருவரும் உதவி செய்கிறார்கள் அக்காளை கொடுமை படுத்தும் கணவனாக நமோ நாராயணன் தன் பங்கை கட்சிதமாக ஊரில் பேராண்மை வசுந்தர நடிப்பில் மிரட்டி இருக்காங்க சும்மாவே அவங்களுக்குள்ள ஆண்மைத்தனம் இருக்கும் இதுல ஆண்களுடன் சண்டை போடணும்னா? சுப்பர். சசிக்காக உயிரை விடும் காட்சி மனதில்!    இந்த கதாநாயகி சசியின் முதல் பட நாயகி சுவாதி அந்த கிராமத்து தேவதை இதுல மிஸ்ஸிங் (சொந்த குரலாம் நல்ல பண்ணிருக்காங்க) 

எல்லாம் சுப்பர் இந்த பாடல்தான் ஏன் சொதப்ப விடுறாங்கனு தெரியல ஒரு பாட்டு கூட மனதில் நிற்கவில்லை ஏதோ டூயட் வேற கருமம்! சுந்தர்.c. பாபு கொடுமை!!   சொத்தே அவங்களுக்கு இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் ஏன் கொலை செய்ய துடிக்கிறது புரியலை?. காலனியில் குடி இருக்கும் படவா கோபி அவர் மனைவி அடிக்கும் ரவுசு வயிறு புண்ணாகும் குடிகாரனை வருபவரும் ஞானசம்பந்தம், பெட்ரோல் பங் முதலாளி, ஜெயபிரகாஷ். அனைவரின் நடிப்பும் கச்சிதம் இப்படத்தினால் மயக்கம் என்ன சற்று அடிவாங்கும்.மீண்டும் ஒருமுறை நகைச்சுவைக்காக பார்க்க துண்டும் படம். ரொம்ப யோசிக்காம, பார்ப்பவர்களை மண்டை குழம்பவிடாமல் சிம்பிளா, ஜாலியா, நியாமான கோபத்துடன் ஒரு படம் போராளி.     

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...