|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 December, 2011

குஜராத்தில் புதிய கார் ஆலை அமைக்க ரினால்ட் திட்டம்.


ஃபோர்டு, பியூஜியட், மாருதியை தொடரந்து குஜராத்தில் புதிய கார் ஆலை அமைக்க ரினால்ட் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனம் ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனத்தின் கூட்டணியில் சென்னை அருகே ஆலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. 

புளூயன்ஸ், கோலியோஸ் ஆகிய கார்களை விற்பனை செய்து வரும் அந்த நிறுவனம் டஸ்ட்டர் என்ற காம்பெக்ட் எஸ்யூவியையும், பல்ஸ் என்ற ஹெட்ச்பேக் காரையும் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கியுள்ள அந்த நிறுவனம் தனது உற்பத்தி திறனை அதிகரித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட வகையில் குஜராத்தில் புதிய கார் ஆலையை அமைக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஃபோர்ஸ் வர்த்தக இதழில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஆலையில் சிறிய கார்களை தயாரிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, குஜராத்தில் 400 ஏக்கரில் புதிய ஆலையை கட்டுவதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...