|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 December, 2011

தலையணையால் அமுக்கி பெண் குழந்தை கொலை!

ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் வளவெட்டிகுப்பத்தை சேர்ந்தவர் சசிகுமார்(31). விவசாய தொழிலாளி. மனைவி கண்மணி(28). 5வயதில் மகன் உள்ளான். பின்னர் அடுத்தடுத்து 2 பெண் குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன. கடந்த 23ம் தேதி வளவெட்டி குப்பம் அரசுஆரம்ப சுகாதார நிலையத் தில் கண்மணிக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 3வது நாள் தாயும், சேயும் வீடு வந்தனர். அடுத்த நாள்(27ம்தேதி) அந்த பெண் குழந்தை இறந்து விட்டது. குழந்தை இறப்பு குறித்து சந்தேகமடைந்த கிராம நிர்வாக அதிகாரி பொய்யாமொழி உடையார்பாளையம் போலீசில் புகார் செய்தார். இதற்கிடையே அன்றைய தினம் மாலை குழந்தையின் சடலத்தை புதைக்க சுடுகாட்டுக்கு எடுத்துச்சென்றனர். உடையார்பாளையம் போலீசார் சென்று நடுவழியில் அவர் களை மடக்கி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடந்த பிரேத பரிசோதனையில், தலையாணையால் அமுக்கி குழந்தையை கொன்றது அம்பலமானது.  இதைத்தொடர்ந்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சசிகுமார், கண்மணி இருவரையும் நேற்று கைது செய்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...