|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 December, 2011

முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக!


காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவர் 5 வயதில் கண்பார்வை இழந்தார். தனது 8-வது வயதில் பூந்தமல்லி அரசு பார்வையற்றறோர் பள்ளியில் சேர்ந்து 11-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் புதுமுக வகுப்பு, பி.ஏ. ஆங்கிலம் மற்றும் எம்.ஏ. ஆங்கிலம் படித்து தேர்ச்சி பெற்றார். ராயப்பேட்டை மெஸ்டன் கல்வியியல் கல்லூரியில் பி.எட் பட்டம் பெற்றார். அஞ்சல்வழி கல்வி மூலமாக எம்.எட் மற்றும் எம்.பில் பட்டங்களை பெற்றார் பார்வையற்ற மாணவர்களுக்காக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் என்ற அமைப்பு 1981-ல் தொடங்கப்பட்ட போது அதன் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும், சங்கத்தின் தலைவராகவும் சேவை புரிந்துள்ளார்.

பார்வையற்ற ஆசிரியர் சங்கத்தில் 2 முறை மாநில தலைவராக இருந்துள்ளார். 1984-ல் முதுகலை ஆசிரியராக பணிநியமனம் இவருக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 3.12.1984 அன்று சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆங்கிலம் ஆசிரியராக 4 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் 18 ஆண்டுகளும், காஞ்சீபுரம் மாவட்டம் அய்யங்கார்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 5 ஆண்டுகளும் முதுநிலை ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்.

 
பின்னர் அதே பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக இருந்தார். தற்போது அரக்கோணம் தாலுகா மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பதிவு உயர்வு பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழ் நாட்டின் முதல் பார்வையற்ற தலைமை ஆசிரியராக பொறுப்பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட துறை தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றவர். இது குறித்து தலைமை ஆசிரியர் மனோகரன்,    ‘’நான் பொறுப்பெற்று இருக்கும் பள்ளியில் போது தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை நூற்றுக்கு நூறு ஆக்க வேண்டும் என்பதே என் லட்சியம்’’ என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...