|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 November, 2011

இனவெறி இலங்கையில் 2013ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாடு புறக்கணிப்பு!

கலிபோர்னியா: இனவெறி இலங்கையில் 2013ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்துள்ளதற்கு அமெரிக்க நாம் தமிழர் அமைப்பு வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி:  கடந்த ஞாயிறன்று நடந்த காமன்வெல்த் மாநாட்டின்போது, 2013ம் ஆண்டு காமன்வெல்த் மாநாட்டை நடத்தவுள்ள இலங்கையின் அதிபர் ராஜபக்சேவை பேச அழைத்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் வெளிநடப்பு செய்தது மிகவும் துணிகரமான, பாராட்டுக்குரிய செயலாகும். இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து அக்கறையும் கவலையும் கொண்டுள்ள மேற்கத்திய தலைவர்களுக்கு இது ஊக்கம் தரும் செயலாக அமைந்துள்ளது. உலகத் தலைவர்கள், மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்து வரும் இலங்கையை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு சரியான முன்னுதாரணமாக கனடா பிரதமரின் நடவடிக்கை அமைந்துள்ளது.

2013 காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கும் முடிவு குறித்து ஹார்ப்பரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இலங்கை மீதானகடுமையான மனித உரிமை மீறல்கள்,போர்க்குற்றச்சாட்டுக்கள், தமிழர் மீள்குடியேற்றம் உள்ளிட்டவை குறித்து தான் ராஜபக்சேவுடன் பேசியதாக குறிப்பிட்டார். இதுதொடர்பாக இலங்கை அரசு மிகவும் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜபக்சேவை தான் வலியுறுத்தியதாகவும் கூறினார் ஹார்ப்பர். மேலும் நாகரீகமடைந்த உலகிந் எதிர்பார்ப்புகளை ராஜபக்சே அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியதாகவும் தெரிவித்தார் ஹார்ப்பர். மேலும், இந்தப் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு ஆக்கப்பூர்வமான தீர்வு காணாவிட்டால்,2013 காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்ற தனது முடிவை மறு பரிசீலனை செய்யப் போவதில்லை என்றும் ஹார்ப்பர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

கனடாப் பிரதமரின் இந்த உறுதியான முடிவை திறந்த மனதுடனும், மகிழ்ச்சியுடனும் நாம் தமிழர் அமெரிக்கா வரவேற்கிறது. இதேபோன்ற நடவடிக்கையை உலகத் தலைவர்களிடமிருந்தும் நாம் தமிழர் அமெரிக்கா எதிர்பார்க்கிரது. மேலும் இதைப் பயன்படுத்திக் கொண்டு, ஹார்ப்பரும், பிற உலகத் தலைவர்களும் இலங்கைக்கும், ராஜபக்சே அரசுக்கும் கடும் நெருக்குதல்களைக் கொடுக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை உள்ளிட்டவற்றை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மரியாதையுடனும், கெளரவத்துடனும், அமைதியுடனும் வாழ வழி கிடைக்கும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. நாம் தமிழர் அமெரிக்கா, கலிபோர்னியாவைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட பொது நலன் அமைப்பாகும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நலனுக்காக இந்த அமைப்பு பாடுபட்டு வருவதாக அதன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் விவரங்களுக்கு www.us.naamtamilar.org

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...